Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பேசி கதிர்வீச்சு - அரசு எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (16:25 IST)
செல்பேசியைப் பயன்படுத்தும்போது வெளியாகும் மின்காந்த அலைகளால் மூளையிலுள்ள திசுக்களில் பாதிப்புகள் ஏற்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தனது பரிந்துரைகளில் எச்சரித்துள்ளது.

இதனால் செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது செல்பேசி விளம்பரங்களில் கருத்தரித்த பெண்கள், குழந்தைகள் ஆகியோர் செல்பேசியைப் பயன்படுத்துவது போல் காண்பிப்பதை தவிர்க்கவேண்டும் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதாவது குழந்தைகள், கருத்தரித்த பெண்கள், இருதய நோய் உள்ளவர்கள் செல்பேசிகளை குறைந்த அளவில் பய‌ன்படுத்தவேண்டும் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

குறிப்பாக 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்தும்போது, அவர்களது மென்மையான மூளைத் திசுக்கள் பாதிப்படையலாம் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments