Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுடன் பேச குஜ்ஜார் தலைவர் மறுப்பு!

Webdunia
ஞாயிறு, 25 மே 2008 (12:39 IST)
தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரி போராடிவரும் குஜ்ஜார் நடவடிக்கைக் குழு, இராஜஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது.

தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது முறையாக போராட்டத்தைத் துவக்கியுள்ள குஜ்ஜார் சமூகத்தினருக்கும் காவல் துறையினருக்கும் நடந்த மோதலையடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 36 பேர் உயிரிழந்தனர்.

டெளஸாவில் நேற்று நடந்த போராட ்ட‌த்‌த ின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 12 பேரின் சடலங்களுடன் பில்லிப்புரா இரயில் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் நடவடிக்கைக் குழுத் அமைப்பாளர் கர்னல் கிரோடி சிங் பைன்ஸ்லா, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜி விடுத்த அழைப்பை நிராகரிப்பதாக கூறிவிட்டார்.

இதற்கிடையே தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தியும், அரசைக் கண்டித்தும் முழு அடைப்பு நடத்துமாறு குஜ்ஜார் அமைப்புகள் விடுத்த அழைப்பை அடுத்து டெளஸா உள்ளிட்ட 12 நகரங்களில் முழு அடைப்பு நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments