Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கு‌கிறது இந்தியா!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (15:18 IST)
க‌டற்படை‌க்கு பு‌திதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க முடிவு செய்துள்ளதாக இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

மு‌‌ம்பையில் நட‌ந்த இரண்டு நாள் கடற்படை காமாண்டர்கள் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறிய மேத்தா இந்திய கடற்படை இதனை தீவிரமாக பரிந்துரை செய்து வருகிறது என்றார்.

நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தேவை தற்போது குறைவாக உள்ளதால் வெளி நாடுகளிலிருந்து வாங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவி‌த்தார்.

எதிர்காலத்தில் அணுத்திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவுள்ளதாக கூ‌றிய மேத்தா, தற்போது அணு நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பிடம் உ‌ள்ளதாக‌‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பு‌திதாக வா‌ங்க‌ப்படு‌ம் 6 நீர்மூழ்கிக் கப்பல்களுக்காக விடப்படும் உலக அளவிலான ஒப்பந்தப் புள்ளிகளில் நேராக மேலெழும்பும் ஏவுகணை திறன்களின் தேவை வலியுறுத்தப்படவுள்ளன என்றார் அவ‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments