Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராமர் பாலமா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை!

Webdunia
வியாழன், 8 மே 2008 (18:11 IST)
சேது சமுத்திர கால்வாய் திட்டப்பகுதியில் உள்ள நிலத்திட்டுக்கள் இராமர் பாலம்தானா என்பதைக் கண்டறிய தொல்லியல் துறை ஆய்விற்கு உட்படுத்தி, அதனை புராதன சின்னமாக அறிவிக்கும் சாத்தியக் கூறு குறித்து மத்திய அரசு ஆலோசித்திட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பஞ்சால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.

“சென்னை உயர் நீதிமன்றம் கூறியது போல அது இராமர் கட்டியதுதானா என்பதை தொல்லியல் துறையைக் கொண்டு ஆய்வு செய்து, அது உறுதியானால் அதனை புராதன சின்னமாக அறிவிப்பது குறித்த சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும ்” என்று நீதிமன்றக் குழு கேட்டுக்கொண்டது.

இவ்வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்த உச்ச நீதிமன்ற அமர்வு, சேது சமுத்திரத் திட்டத்தை வேற்றுப் பாதையில் நிறைவேற்றும் சாத்தியம் உள்ளதா என்பது குறித்தும் ஆராயும்படியும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments