Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு உற்பத்தி அமோகம்!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (13:35 IST)
இந்த வருடம் உணவு தாணியங்கள் உற்பத்தி எதிர்பார்த்த அளவு இருக்கும் என்று மத்திய விவசாய துறை செயலாளர் பி.கே. மிஸ்ரா தெரிவித்தார்.

இந்த நிதி வருடம் (2007-08) கோதுமை, நெல் உட்பட உணவு தாணியங்களின் உற்பத்தி 227.32 மில்லியன் (1 மில்லியன் 10 லட்சம ்) டன்னாக இருக்கும். இதில் கோதுமை உற்பத்தி மட்டும் 76.78 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புது டெல்லியில் நேற்று மூன்றாவது மதிப்பீடு அறிக்கையை வெயிட்டு மிஸ்ரா பேசுகையில், இந்த ரபி பருவத்தில் பருவ மழை நன்கு இருந்தது. அத்துடன் சாதகமான தட்ப வெட்பம் நிலவியது. இதனால் சென்ற ரபி பருவத்தைவிட கோதுமை விளைச்சல் 10 மில்லியன் டன் அதிகரித்துள்ளது.

இந்த பயிர் ஆண்டில் (ஜீன் முதல் மே வர ை) 76.78 டன் கோதுமை உற்பத்தியாகும். சென்ற வருடம் 75.81 டன் உற்பத்தியானது.

இதே போல் நெல், மக்காச் சோளம், துவரை, உளுந்து, சோயா, பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

இந்த வருடம் நெல் உற்பத்தி 95.68 மில்லியன் டன்னாக இருக்கும். இது சென்ற வருடத்தைவிட 2 மில்லியன் டன் அதிகம்.

உளுந்து, சோளம் போன்ற தாணியங்களின் உற்பத்தி 39.67 மில்லியன் டன்னாக இருக்கும். இந்த வகை தாணியங்களின் உற்பத்தி சென்ற வருடம் 33.92 மில்லியன் டன்னாக இருந்தது.

இதில் மக்காச் சோளம் 15.19 மில்லியன் டன், துவரை உற்பத்தி 3.03 மில்லியன் டன், உளுந்து உற்பத்தி 1.56 மில்லியன் டன், சோயா 9.43 மில்லியன் டன்னாக இருக்கும்.

இதுவரை இல்லாத அளவு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியும் சென்ற வருடத்தைவிட 4 மில்லியன் டன் அதிகரிக்கும். இதில் நிலக்கடலை உற்பத்தி இதுவரை இல்லாத அளவு உயரும். அதே நேரத்தில் எண்ணெய் கடுகு உற்பத்தி 13 விழுக்காடு (6.43 மில்லியன் டன ்) குறையும் என்று தெரிகிறது.

இதே போல் கரும்பு உற்பத்தியும் 3.2 விழுக்காடு குறைந்து, கரும்பு உற்பத்தி 344.23 மில்லியன் டன்னாக இருக்கும்.

பருத்தி உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. சென்ற வருடத்தை விட பருத்தி விளைச்சல் 6 லட்சம் பேல் அதிகரிக்கும். இந்த வருடம் 23.19 மில்லியன் பேல் பருத்தி உற்பத்தியாகும் (1 பேல் 170 கில ோ).

இந்த வருடம் கம்பு, கேழ்வரகு போன்ற தாணியங்களின் உற்பத்தி இதுவரை இல்லாத அளவாக 15.19 மில்லியன் டன் என்ற அளவை எட்டும்.

இதன் உற்பத்தி மத்திய அரசின் திட்டங்களான தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் போஜனா ஆகிய திட்டங்களால் அதிகரித்தது.

இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு தரமான விதை கொடுக்கப்பட்டது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் உற்பத்தி 29 விழுக்காடும், சட்டீஸ்கார் மாநிலத்தில் உற்பத்தி 4 மடங்காக (400 விழுக்காட ு ) உயர்ந்தது என்று மிஸ்ரா கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

Show comments