Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரப்ஜித் சிங்கிற்கு பாகிஸ்தான் கருணை காட்டவேண்டும்: பிரணாப் வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (19:33 IST)
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 17 ஆண்டுகளாக லாகூர் சிறையில் வாடும் சரப்ஜித்திற்கு பாகிஸ்தான் அரசு கருணை காட்ட வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை வரும் மே 1ஆம் தேதி நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் பிரணாப் முகர்ஜி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சட்டத்தின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், 1990ஆம் ஆண்டு முதல் கடந்த 17 ஆண்டுகளாக சிறையில் வாடும் சரப்ஜித்திற்கு மனிதாபிமான அடிப்படையில் கருணை காட்ட வேண்டும ் ” என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு லாகூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்று குற்றம்சாற்றப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த்து. தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏப்ரல் 1ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டது. ஆனால், இந்திய தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு மாத காலத்திற்கு தண்டனை நிறைவேற்றம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments