Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌‌யி‌ல் வரலாறு காணாத பாதுகா‌ப்புட‌ன் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌ம்!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (20:02 IST)
‌ விடுதலை கே‌ட்டு‌ப் போராடு‌‌ம் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ளி‌ன் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு‌‌க்கு இடை‌யி‌ல், வரலாறு காணாத பாதுகா‌ப்புட‌ன் தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சு‌ட‌ர் ஓ‌ட்ட‌ம் ‘வெ‌ற்‌றிகரமா க ’ நட‌ந்து முடி‌ந்தது.

பல‌த்த பாதுகா‌ப்பையு‌ம் ‌மீ‌றி ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌த்‌தி‌‌ற்கு இடையூறு செ‌ய்ய முய‌‌ன்ற நூ‌ற்று‌க்கும் அ‌திகமான ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

2008 ஒ‌லி‌ம்‌பி‌க் ‌விளையா‌ட்டு‌ப் போ‌ட்டிக‌ள் ஆக‌ஸ்‌ட் மாத‌ம் ‌சீன‌த் தலைநக‌ர் பீஜி‌ங்‌கி‌ல் நட‌க்‌கிறது. இதை மு‌ன்‌னி‌ட்டு ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் 5 க‌ண்ட‌ங்க‌ளிலு‌ம் உ‌ள்ள 21 மு‌க்‌‌கிய நகர‌ங்க‌ளி‌ல் 1,37,000 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ற்கு 97 நா‌ட்க‌ளி‌ல் தொடர் ஓட்டமாக எடு‌த்து‌ச் செ‌ல்ல‌ப்படு‌கிறது.

சீன அட‌க்குமுறையை‌ எ‌தி‌ர்‌த்து‌ம் ‌திபெ‌த்‌தி‌ன் ‌விடுதலையை வ‌லியுறு‌த்‌தியு‌ம் போராடி வரு‌ம் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள், ‌சீனா நட‌த்து‌ம் இந்த ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டிகளு‌க்கு‌ம் எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்து வருகின்றன‌ர். ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் செ‌ல்லு‌ம் இட‌ங்க‌ளி‌ல் எ‌ல்லா‌ம் அவ‌ர்க‌ள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வரு‌கி‌ன்றன‌ர்.

ல‌ண்ட‌ன ், பாரீ‌ஸ் நகர‌ங்க‌ளி‌ல் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் நட‌த்‌திய போரா‌ட்ட‌த்‌தினா‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் 4 முறை‌க்கு‌ம் மே‌ல் அணை‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் செ‌ல்லு‌ம் இட‌ங்க‌ளி‌ல் பாதுகா‌ப்பு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

விமான ‌நிலைய‌த்‌தி‌ல் வ‌ண்ணமயமான வரவே‌ற்ப ு!

இ‌ந்‌நிலை‌யி‌ல ், அனைவராலு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் வரலாறு காணாத பாதுகா‌ப்புட‌ன் நே‌ற்று ந‌ள்‌ளிரவு 1.10 ம‌ணி‌க்கு பா‌கி‌ஸ்தா‌னி‌ல் இரு‌ந்து ராணுவ ‌விமான‌ம் மூல‌ம் டெ‌ல்‌லி வ‌ந்தடை‌ந்தது.

இ‌ந்‌திய ா, ‌ சீனாவை‌ச் சே‌ர்‌ந்த ‌சிறுவ‌ர் ‌சிறு‌மிக‌ள் வ‌ண்ணமயமான உடைகளை அ‌ணி‌ந்து‌ம ், வ‌ண்ண வ‌ண்ண பலூ‌ன்களை‌ப் பற‌க்க‌வி‌ட்டு‌ம் ஒ‌லி‌ம்‌பி‌க் சுடரை வரவே‌ற்றன‌ர். இ‌ந்‌திய ஒ‌லி‌ம்‌‌பி‌க் கூ‌ட்டமை‌ப்பு‌த் தலைவ‌ர் சுரே‌ஷ் க‌ல்மாட ி, ‌ சீன‌த் தூத‌ர் ஜா‌ங் யா‌ன் ஆ‌கியோ‌ர் இ‌தி‌ல் ப‌ங்கே‌ற்றன‌ர்.

‌ பி‌ன்ன‌ர் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் பல‌த்த பாதுகா‌ப்‌பி‌ற்கு இடையே தொட‌ர் ஓ‌ட்ட‌ம் நட‌‌க்கு‌ம் ராஜபாதை‌யி‌ல் உ‌ள்ள லீ மெ‌ரிடிய‌ன் ஓ‌ட்டலு‌க்கு எடு‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்டது.

3 அடு‌க்கு‌ப் பாதுகா‌ப்‌பி‌‌ல் தொட‌ர் ஓ‌ட்ட‌ம ்!

குடியரசு நா‌ள் அ‌ணிவகு‌ப்‌பை‌ப் போல 3 அடு‌க்கு‌ப் பாதுகா‌ப்‌பி‌ன் ‌கீ‌ழ் ரை‌சினா ஹ‌ி‌ல் பகு‌தி‌யி‌ல் நட‌ந்த ‌விழா‌வி‌ல் பீ‌ஜி‌ங் ஒ‌லி‌ம்‌‌பி‌க் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க் குழு‌‌த் துணை‌த் தலைவ‌ர் ‌ஜியா‌ங் யு ஒ‌லி‌ம்‌பி‌க் சுடரை ஏ‌ற்‌றி வை‌த்தா‌ர்.

‌ பி‌ன்ன‌ர் அதை டெ‌ல்‌லி மா‌நில முத‌ல்வ‌ர் ஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌த் பெ‌ற்று இ‌ந்‌திய ஒ‌லி‌ம்‌‌பி‌க் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் சுரே‌ஷ் க‌ல்மாடி‌யிட‌ம் வழ‌ங்‌கினா‌ர். இதைடு‌த்து ச‌ரியாக மாலை 4.45 ம‌ணியள‌வி‌ல் மு‌ன்னா‌ள் ம‌ல்யு‌த்த ‌வீர‌ர் ச‌த்பா‌ல் முத‌ல் ஆளாக ஒ‌லி‌ம்‌பி‌க் சுடரை ஏ‌ந்‌தி‌ 2.3 ‌கி.‌மீ தொட‌ர் ஓ‌ட்ட‌த்தை‌த் துவ‌க்‌கி வை‌த்தா‌ர ்.

ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌த்‌தி‌ல் 47 ‌விளையா‌ட்டு ‌வீர‌ர ், ‌ வீரா‌ங்கனைக‌ள் உ‌ள்பட 70 பே‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர். ‌மி‌ல்கா ‌சி‌ங ், ‌ லியா‌ண்ட‌ர் பய‌ஸ ், ‌ பி.ட ி. உஷ ா, அ‌ஞ்சு ஜா‌ர்‌ஜ ், த‌ன்ரா‌ஜ் ‌பி‌ள்ள ை, ஜாஃப‌ர் இ‌க்பா‌ல ், அ‌ஸ்லா‌ம் ஷெ‌ர்கா‌ன ், கு‌ஞ்சு ரா‌ன ி, ஹ‌ி‌ந்‌தி நடிக‌ர்க‌ள் அ‌மீ‌ர் கா‌ன ், சை‌ஃப் அ‌லிகா‌ன் உ‌ள்‌ளி‌ட்டவ‌ர்க‌ள் மு‌க்‌கியமானவ‌ர்க‌ள் ஆவ‌ர்.

குறை‌ந்த இடைவெ‌‌ளி‌யி‌ல் ‌வீர‌ர்க‌ளிடையே ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் கைமா‌றியது. சுமா‌ர் 40 ‌‌நி‌மிட‌ங்க‌ளு‌க்கு‌ப் ‌பிறகு இ‌ந்‌தியா கே‌ட் பகு‌தி‌யி‌ல் எ‌ந்த‌வித இடையூறு‌ம் இ‌ல்லாம‌ல் தொட‌ர் ஓ‌ட்ட‌ம் ‌நிறைவடை‌ந்தது.

இதையடு‌த்து இ‌ன்று இரவு ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் தாய்லாந்து தலைநகர் பா‌ங்கா‌ங் எடு‌‌த்து‌ச் செ‌ல்ல‌ப்படு‌கிறது.

ஓ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்துகொ‌‌ள்ள மறு‌த்தவ‌ர்க‌ள ்!

ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திலிருந்து இசை அமைப்பாளர் அயான் அலி, துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ரான ா, சச்சின் தெண்டுல்கர், இந்திய கால்பந்தாட்ட அணித் தலைவர் பைச்சிங் பூட்டியா, பெண் காவ‌ல் அதிகாரி கிரண் பேடி, நடிகை சோகா அலிகான் ஆகியோர் மறுத்து விட்டனர்.

தெண்டுல்கர் காய‌ம் காரணமாகவு‌ம், கால்பந்து அ‌ணி‌த் தலைவ‌ர் பூட்டியா திபெத்தியர்களுக்கு ஆதரவாகவு‌ம், நடிகை சோகா அலிகான் தனிப்பட்ட காரணத்துக்காகவு‌ம் விலகினர்.

நாடெ‌ங்கு‌‌ம் திபெ‌த்‌திய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்- கைது!

ல‌ண்ட‌ன், பா‌ரீ‌ஸ் நகர‌ங்க‌ளி‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌திராக‌ப் போரா‌ட்ட‌ங்க‌ள் நட‌ந்‌திரு‌ந்தாலு‌ம், இரு ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திபெ‌த்‌திய அக‌திக‌ள் வ‌சி‌க்கு‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல் எ‌தி‌ர்‌ப்பு அ‌‌திக‌ம் இரு‌க்கும் எ‌ன்பதா‌ல் மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கைக‌ள் எடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன.

டெ‌ல்‌லி‌யி‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்து சாலை ம‌றிய‌ல்க‌ளி‌ல் ஈடுபட முய‌ன்றதுட‌ன் அதை‌த்தடு‌த்த காவல‌ர்களுட‌ன் மோத‌லிலு‌ம் ஈடுப‌ட்ட 60 ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

ரா‌‌ஜ்கா‌ட்டி‌ல் மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் சமா‌தி‌யி‌ல் இரு‌ந்து ஜ‌ந்த‌ர் ம‌ந்த‌ர் பகு‌தி வரை எ‌ல்லா மத‌த்‌தினரு‌ம் அட‌ங்‌கிய ஒ‌லி‌ம்‌பி‌க் சுடரு‌க்கு மா‌ற்றான அமை‌தி‌ச் சுட‌ர் ஓ‌ட்ட‌த்தை ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் நட‌த்‌தின‌ர். இ‌தி‌ல் மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ஜா‌ர்‌ஜ் பெ‌ர்ணா‌ண்ட‌ஸ் உ‌ள்‌பட நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்க‌ள் ப‌ங்கே‌ற்றன‌ர்.

இதேபோல மு‌ம்பை‌யி‌ல் நாராய‌ண் முனை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ள ‌சீன‌த் தூதரக அலுவலக‌ம் அரு‌கி‌ல் பேர‌ணி நட‌த்த முய‌ன்ற 45 ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

பெ‌ங்களூரு‌வி‌ல் ம‌த்‌திய எ‌ம்.‌ஜி.சாலை, பன‌ப்பா பூ‌ங்கா உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் நூ‌‌ற்று‌க்கண‌க்கான ‌திபெ‌த் அக‌திக‌ள் கூடி ‌சீனா‌வி‌ற்கு எ‌திரான முழ‌க்க‌ங்களை எழு‌ப்‌பின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments