Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் மத்திய அமைச்சர் மக்பூல் தார் காலமானார்!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (12:31 IST)
முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் மொஹமத் மக்பூல் தார் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனை‌யி‌ல் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 65.

இவருக்கு 2 மனைவிகளும் 5 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக ஷெர்-இ காஷ்மீர் மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். அ‌ங்கு ‌சி‌‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி நேற்றிரவு அவ‌ர் காலமானார்.

காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஷாங்கஸ் என்ற இடத்தில் 1943ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் மக்பூல் தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பிறகு 1971ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.

1975 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1983 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 1987ல் தோல்வியுற்றார். அதன் பிறகு சுயேட்சையாக தேர்தலில் நின்றார்.

1996 ஆம் ஆண்டு ஜனதா தள வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். தேவகவுடா தலைமையிலான அரசில் இவர் உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments