Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் : நர்மதா கால்வாயில் ‌பேருந்து கவிழ்ந்து மாணவர்கள் 15 பேர் பலி!

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2008 (12:22 IST)
குஜராத் மாநிலத்த ில் வடோதரா அருகே நர்மதா கால்வாயில ் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் 15 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வடோதராவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பொடேலி கிராமத்தில் இன்று அதிகாலை 6 மணியளவில் இத்துய ரச் சம்பவம் நடந ்தது.

இதுவரை பேருந்து ஓட்டுனர் உள்பட 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும், இதில் பெரும்பாலானோர் பள்ளிச் சிறுவர்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜய் ந ேக ்ரா தெரிவித்தார்.

மேலும், 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

கல்விச் சுற்றுலாவுக்காக 5 முதல் 11-ம் வகுப்பு வரையிலான 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தர்போட் கிராமத்தில் இருந்து பொடேலிக்கு குஜராத் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தப் பேருந்து, பொடேலியில் பாலத்தைக் கடந்தபோது, நிலை தடுமாறி நர்மதா கால்வ ாயில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் 5 பேர் தண்ணீரில் இருந்து நீந்தி கரையேறி அருகில் உள்ள கிராமத்தினரிடம் விபத்து குறித்த தகவலைத் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், மேலும் பல மாணவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments