Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி ‌பிர‌ச்சனையை நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் எழு‌ப்புவோ‌ம்: அ‌த்வா‌னி!

Webdunia
திங்கள், 14 ஏப்ரல் 2008 (18:55 IST)
பண‌வீ‌க்க‌த்தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்‌தி ‌விலைவா‌சியை‌க் குறை‌க்கு‌ம் ‌விடய‌த்‌தி‌ல் கா‌ங்‌‌கிர‌ஸ் தலைமை‌யிலான ம‌த்‌திய ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு‌க் கூ‌ட்ட‌ணி அரசு தோ‌ல்‌வியடை‌ந்து ‌வி‌ட்டது எனவு‌ம், அடு‌த்த நாடாளும‌ன்ற‌க் கூ‌ட்ட‌த் தொட‌ரி‌ல் இ‌ப்‌பிர‌‌ச்சனையை எழு‌‌ப்பவு‌ள்ளதாகவு‌ம் பா.ஜ.க. ‌வி‌ன் மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னி கூ‌றினா‌ர்.

ச‌ட்டமேதை அ‌ண்ண‌ல் அ‌ம்பே‌த்க‌ர் ‌பிற‌ந்த மொள நகர‌த்‌தி‌ல் அவருடைய ‌பிற‌ந்த நாளை மு‌ன்‌னி‌ட்டு நட‌ந்த ‌விழா‌வி‌ல் ப‌ங்கே‌ற்ற எ‌ல்.கே.அ‌த்வா‌னி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், "சாதாரண ம‌க்களு‌க்கு எராளமான ‌பிர‌ச்சனைகளை‌க் கொடு‌க்க‌க்கூடிய பண‌வீ‌க்க உ‌ய‌ர்வை‌க் க‌ண்ட‌றி‌ந்து க‌ட்டு‌ப்படு‌த்து‌‌ம் ‌விடய‌த்‌தி‌ல் ம‌த்‌திள அரசு தோ‌ல்‌வியடை‌ந்து ‌வி‌ட்டது. அ‌த்‌தியா‌வ‌சிய‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை தொட‌ர்‌ந்து அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது" எ‌ன்றா‌ர்.

" பண‌வீ‌க்க‌ உய‌ர்‌வி‌ற்கான காரண‌த்தை‌க் க‌ண்ட‌‌றிய நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ப‌ட்ஜெ‌ட் கூ‌ட்ட‌த் தொட‌ரி‌ல் அரசு உறு‌திய‌ளி‌த்தது. ஆனா‌ல் அரசு தனது நடவடி‌க்கை‌யி‌ன் முத‌ல் க‌ட்ட‌த்‌திலேயே தோ‌ல்‌வியடை‌ந்து ‌வி‌ட்டது. அடு‌த்த நாடாளும‌ன்ற‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் இ‌வ்‌விவகார‌த்தை எழு‌ப்ப‌த் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள்ளன" எ‌ன்றா‌ர் அ‌த்வா‌னி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments