Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானாவதி குழுவில் நீதிபதி அக்க்ஷய் மேத்தா!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (10:49 IST)
கோத்ரா ரயில் எரிப்பு அதன் பிறகு வெடித்த குஜராத் கலவரங்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நானாவதி குழுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்க்ஷய் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு இருந்த நீதிபதி கே.ஜி.ஷா காலமானதால் இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

குஜராத் கலவரங்கள் நடந்த 2002ஆம் ஆண்டு இந்த குழுவை குஜராத் ம ாந ில அரசு நியமித்தது.

முதலில் கோத்ரா ரயில் எரிப்பு பற்றிய விசாரணைக்காக நீதிபதி கே.ஜி.ஷாவை மட்டுமே குஜராத் ம ாந ில அரசு நியமித்தது. பிறகு நீதிபதி ஜி.டி. நானாவதி தலைமையில் இரு நபர் விசாரணைக் குழுவாக மாற்றப்பட்டது. அப்போது குஜராத் கலவரங்கள் குறித்த விசாரணையும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த விசாரணையை நானாவதி குழு நடத்தி வருகிறது. இந்நிலையில் நீதிபதி கே.ஜி.ஷாவின் மறைவிற்குப் பிறகு அக்க்ஷய் மேத்தா தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments