Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிப்மர் மருத்துவமனைக்கு விரைவில் தன்னாட்சி அந்தஸ்து: நாராயணசாமி!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (10:29 IST)
'' புதுச்சேர ி ஜிப்மர ் மருத்துவமனைக்கு நாடாள ுமன்றத்தின் அங்கீகாரம் பெற்று விரைவில் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும ்'' என்று மத்திய அமை‌ச்ச‌ர் நாராயணசாமி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மத்திய திட்டத்துறை இணை அமை‌ச்சராக பதவி ஏற்றுள்ள வி.நாராயணசாமி நேற்று தனது அலுவலகத்துக்கு சென்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். ‌ பி‌‌ன்ன‌ர் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, ஜவுளிப் பூங்கா, சுற்றுலாத் துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

புதுச்சேரியை இந்தியாவின் சிங்கப்பூராக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அளிப்பது குறித்து நாடாள ுமன்றத்தில் மீண்டும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இடதுசாரிகள், மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவச மருத்துவம், ஜிப்மரில் மருத்துவ பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கட்டண சலுகை, ஜிப்மர் ஊழியர்களை தொடர்ந்து அரசு ஊழியர்களாக நீடிக்க அனுமதி ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாட ாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் ஜிப்மர் மருத்துவமனைக்கு விரைவில் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் எ‌ன்று நாராயணசாமி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments