Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுசக்தி ஒத்துழைப்பு: பிரணாப் - புஷ் சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (14:02 IST)
அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ ், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் சந்திப்பில ், இந்தி ய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட இருநாடுகளுடனான உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டத ு.

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்ற அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அந்நாட்டின் அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லே ஆகியோரை சந்தித்து பேசினார்.

இரண்டாவது கட்டமாக நேற்று இரவு நடந்த ரைஸ் உடனான சந்திப்பில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டத ு.

அதிபர் புஷ் உடனான சந்திப்பில் சர்வதே ச, உள்நாட்டு விவகாரங்கள் குறித்தும ், இந்தி ய- அமெரிக்க அணுசக்த ி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்ப ட இருநாடுகளுடனான உறவுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. 30 நிமிடங்கள ் நீடித்த இந்த சந்திப்பு துவங்கியவுடன் அதிபர் புஷ ், அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசும் புகைப்படம ் வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மற்றபட ி, சந்திப்பில் விவாதிக்கப்பட்ட தகவல்கள் எதையும் இருநாடுகளும் வெளியிடவில்லை.

இந்த சந்திப்பிற்கு முன்னதா க, வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் டானா பெரினோ கூறுகையில ், ' இந்தியாவின் அயலுறவு அமைச்சரை சந்திப்பதில் அதிபர் புஷ் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்தியாவுடன ் அணுசக்தி ஒப்பந்தம் உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆழமா ன, பரந்த உறவை அமெரிக்கா கொண்டுள்ளத ு' என்றார்.

அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா சென்றது இதுவே முதன்முற ை. இந்நிலையில் அதிபர் புஷ ், மற்ற அமெரிக்க தலைவர்களுடன் நடந்த சந்திப்ப ு, இரண்டுநாள் பயணம் ஆகியவற்றின் முழு தகவல்களையும் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments