Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்கிரதை: இரசாயன பால்!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (15:31 IST)
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது உங்களுக்கு தெரியும ். பாலில் தண்ணீர் ஊற்றுவார்கள ். சில நேரங்களில் தண்ணீரில் பாலை கலப்பார்கள ்.

இதனை எல்லாம் மிஞ்சும் வகையில ், இராசயண பொருட்களை பயன்படுத்தி செயற்கையாக பால் தயாரித்துள்ளனர ்.

செயற்கையான பால் என்றவுடன ், மரபு அணு மாற்றம் செய்து பருத்தி சாகுபட ி, பூசணிக்காய் அளவு கத்திர ி, தக்காளி பரிசோதனை சாலையில் ஆராய்ச்சி என்று நினைத்து விடாதீர்கள ்.

இந்த அதிசயம் சாட்சாத் நமது பஞ்சாப் மாநிலத்தில் தான் நடந்துள்ளத ு.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற ஊரில் காஸ்டிக் சோடா என்ற இரசாயன பொருளை கொண்டு பால் தயாரிப்பதாக காவல் துறைக்க ு, பொது மக்கள் மீது அனுதாபம் கொண் ட, நல விரும்பி ஒருவர் ரகசியமாக தகவல் கொடுத்தார ்.

காவல் துறையினரால் நம்வே முடியவில்ல ை.

பச ு, எருமை மாடுதான் பால் கொடுக்கும ். செயற்கையாக பாலை எப்படி தயாரிக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டத ு. இருந்தாலும் ரகசிய தகவலை உதாசீனப்படுத்தாமல் ராஜ்புரா காவல் துறையினர ், பால் பண்ணையில் திடீரென சோதனை நடத்தினர ்.

காவல் துறையினருக்கு அதிர்ச்ச ி, அவர்களால் நம்பவே முடியவில்ல ை. இராசயண பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பால் இரண்டு கன்டெய்னர்களில் இருந்தத ு. பத்து லிட்டர ோ, இருபது லிட்டரோ அல்ல, 25 ஆயிரம் லிட்டர ்.

இந்த எமபாதக செயலை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர ்.

அந்த ரசாயன பால் பண்ணையில் 37 மூட்டை காஸ்டிக் சோட ா, 15 மூட்டை பால் பவுடர ், நெய் மற்றும் பால் தயாரிப்பதற்கான இயந்திரம் இருந்தத ு.

இவற்றை காவல் துறையினர் கைப்பற்றினார்கள ்.

காவல் துறையினரின் அன்பான உபசரிப்பில் அந்த மூன்று பேரும ், தாங்கள் கடந்த இரண்டு வருடமாக இராசயணத்தை பயன்படுத்தி செயற்கை பாலை தயாரிப்பதாகவும ், இந்த பாலை பல இடங்களில் விற்பனை செய்துள்ளதையும் ஒத்துக் கொண்டனர ்.

இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 420, 273,274 படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர ்.

இது ஏதோ பஞ்சாப் மாநிலத்தில் தானே நடந்துள்ளது என்று செய்தியை படிப்பதுடன் நிம்மதி பெருமூச்சு விடாதீர்கள ்.

நீங்கள் வாங்கும் பால் தரமானது தான ா, கால் நடைகளிடம் இருந்து கறந்த இயற்கை பாலா அல்லது காஸ்டிக் சோடா போன்ற உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரசாயன பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பாலா என்பதை உறுதி செய்து கொண்டு பால் வாங்குங்கள ்.

காஸ்டிக் சோடா பற்றிய முழு விபரம் அறிய உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள இரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சென்று கேட்டு பாருங்கள ். அதன் அருமை பெருமைகளை விவரிப்பார்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments