Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி முகமை ஒப்பந்த வரைவு தயார் – பிரணாப் முகர்ஜி!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (12:24 IST)
இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான கண்காணிப்பு ஒப்பந்த வரைவு சர்வதேச அணுசக்தி முகமையுடன் இறுதி செய்யப்பட்டு விட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.

எனினும் இதுபற்றிய அரசியல்ரீதியான நடைமுறைகள் முடிந்த பின்னரே பேச்சுகளைத் தொடங்க முடியும் என்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

வாஷிங்டனுக்கு விரைவில் பிரணாப் முகர்ஜி செல்லவிருக்கும் நிலையில் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார்.

சர்வதேச அணுசக்தி முகமை, அணு எரிபொருள் வழங்குவோர் நாடுகள் அமைப்பு, அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவற்றின் ஒப்புதலுக்குப் பிறகு இந்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும், இந்த நடைமுறைகளுக்குப் பிறகே இந்த அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைபடுத்தக்கூடிய நிலையை அடையும் என்று பிரணாப் முகர்ஜி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே அரசு விரும்புவதாகக் கூறிய அவர், பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொண்டுள்ள நிலையில், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாது என்றார்.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் தமக்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுவதை பிரணாப் முகர்ஜி மறுத்தார். அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தாங்கள் முயற்சி செய்கிறோம், அவ்வளவுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக 123 ஒப்பந்தத்தை இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொண்டு 9 மாதங்களுக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி முதல் முறையாக வாஷிங்டனுக்கு செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments