Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய- பூடான் எல்லை 36 மணிநேரம் மூடல்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (19:59 IST)
பூடான் நாடளுமன்ற தேர்தலின் பாதுகாப்பு கருதி இந்திய-பூடான் எல்லைப ் பகுதிகள் 36 மணிநேரம் மூடப்பட உள்ளது.

பூடானில் வரும் 24-ம் தேதி நடக்க உள்ள பொது தேர்தலின் மூலம் 75 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தலையொட்ட ி, பூடான ்- அஸ்ஸாம் எல்லை வரும் 23-ம் தேதி மாலை 6 மணிமுதல் 25-ம் தேதி காலை 6.00 மணிவரை மூடப்படுகிறது. பூடான் நாட்டில் தேர்தல் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்ப ட உள்ளது. பூடான்- மேற்கு வங்க எல்லையும் 22-ம் தேதி இரவு 8 மணி முதல் 25-ம் தேதி காலை 6.00 மணிவரை மூடப்பட உள்ளது.

அதன்பட ி, ' பூடானில் இருந்து மேற்கு வங்கம ், அஸ்ஸாம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்குமான போக்குவரத்து 25-ம் தேதி காலை 6 மணிக்கே துவங்கும ்' என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளத ு.

வடகிழக்கு பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறித்தப்பட்டுள்ளது. பூடான் அரசு கூடுதல் படைகளை இப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளத ு. இந்திய அரசும் எல்லைப்பகுதிகளில் தீவிரவாதிகள ், சமூக விரோதிகள் ஆகியோர் நுழையாமல் தடுக்க கூடுதல் காவல் படையை நிறுத்த உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments