Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான கடத்தல்: பாக் ஒத்துழைக்கவில்லை- பிரணாப்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (19:28 IST)
காந்தஹார் விமானக் கடத்தலில் தொடர்புடைய தீவிரவாதிகளை ஒப்படைப்பதில் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று மக்களவையில் மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி குற்றம்சாட்டினார்.

கடந்த 1999-ம் ஆண்டில் டெல்லியில் இருந்து காட்மாண்டிற்கு 157 பயணிகளுடன் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 5 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு கடத்திச் சென்றது. மூன்று தீவிரவாதிகளை இந்திய அரசு விடுதலை செய்த பிறக ே, பயணிகளை விடுவித்த தீவிரவாதிகள் பாகிஸ்தானிற்குத் தப்பினர ்.

விடுதலை செய்யப்பட்ட மூன்று முக்கிய தீவிரவாதிகளில் ஜெய்ஷ் -ஈ-முகமது தலைவர் மௌலானா மசூத் அசாரும் ஒருவன். இந்த வழக்கில் மூன்று தீவிரவாதிகளுக்கு பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பிரணாப் அளித்த பதிலில ், ' தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்க ை, தீவிரவாதம் மீதான செயலர் அளவிலான பேச்சுவார்த்தை ஆகிய பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானுடன் நடந்துவருகிறது. கந்தஹார் விமானக் கடத்தல் விவகாரத்தில் பாகிஸ்தான் உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்ல ை' என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments