Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமப்புறங்களில் தொலைபேசி வச‌‌தி 8 ‌விழு‌க்காடாக உயர்வு:அமை‌ச்ச‌ர் தகவல்!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (10:57 IST)
'' கடந்த 2007-ம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் தொலைபேசி வசதி 2 ‌விழு‌க்கா‌‌ட்டி‌லிருந்து 8 ‌விழு‌க்காடா க உயர்ந்துள்ளத ு'' என்று மத்திய தொலைத் தொடர்ப ு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளா‌ர ்.

புது டெல்லியில் ப ி. ட ி. ச ி. இந்தியா நிறுவனம் ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த கம்ப ி‌ யில்லா தொழில்நுட்பம ், சேவையில் நவீன போக்கு குறித்த மாநாட்டில் கலந்து கொ‌‌ண்ட ு அவ‌ர ் பேசுகை‌யி‌ல ், கிராமப்புற தொலைபேசி வசதி இலக்கு 25 ‌விழு‌க்காடா க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ம‌ற்று‌ம ் தொழிற்சாலையின் கூட்டு முயற்சி அவசியமாகும். இந்த வகையில் கிராமப்பகுதிகளில் தொலைபேசி கோபுரங்கள் அமைப்பது, உள்கட்டமைப்பை பகிர்ந்து கொள்வது ஆகியவை ஒருசில நடவடிக்கைகளாகும்.

வளரும் நாடுகளில் தொலைத் தொடர்புத் துறையில் இந்தியா ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. அகண்ட அலைவரிசை இணைப்புகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். தற்போது மூன்று மில்லியன் அகண்ட அலைவரிசை இணைப்புகள் மட்டுமே உள்ளன. இது மிகக் குறைவாகும். சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு அகண்ட அலைவரிசை இணைப்புகளை அதிகப்படுத்துவது மிகவும் அவசியம்.

சமீப காலமாக நவீன தொழில்நுட்பங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்பு கிடைத்த முக்கியமான வலைத் தொடர்பு, நாட்டின் அனைத்து மாவட்ட தலைமையகங்களுக்கு பரவியது. பின்னர் கிராமப்புறங்களுக்கு பரவியது. இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு கம்பியில்லா தொழில்நுட்பம் காரணமாக இருக்கலாம ் எ‌ன்று ராசா கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

Show comments