Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைத்தறி நெசவாளர்களுக்கு புதிய சுகாதார காப்புறுதி திட்டம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (11:47 IST)
'' பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு சுகாதார காப்புறுதி வழங்கப்படும்'' என்று மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ. வ ி. க ே. எஸ ். இளங்கோவன் தெரிவித்து‌ள்ளா‌ர ்.

மக்களவையில் நே‌ற்ற ு உறுப்பினர் அசாவுதின் ஓவாசி எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ. வ ி. க ே. எஸ ். இளங்கோவன் ப‌தி‌‌ல் அ‌ளி‌க்கை‌யி‌ல், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு இரண்டு திட்டங்கள் மூலம் சுகாதார காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர்களின் ஒட்டுமொத்த நலத்திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக சுகாதார காப்புறுதி திட்டம ், கைவினை கலைஞர்களுக்காக ராஜிவ் காந்தி சில்பி ஸ்வஸ்த்யா திட்டம் ஆகிய இரு திட்டங்களின் மூலம் பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு சுகாதார காப்புறுதி வழங்கப்படும்.

புற்று நோய், பக்கவாதம், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய், காசநோய், வலிப்பு ஆகிய நோய்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார திட்டத்தின் கீழ் காப்புறுதி பெற முடியாது.

கைத்தறி நெசவாளர்களின் ஒட்டுமொத்த நலத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்த ு ஆலோசனைகள் நடைபெற்ற போது இந்த கடுமையான நோய்களையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவர ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் அதற்கான பிரிமியத் தொகையும் உயரும் நிலை உருவானது.

எனவே குறைந்த பிரிமியத் தொகையில் இந்த நோய்களுக்கான காப்புறுதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டு அந்த பொறுப்பு எல்ஐசி-யிடம் வழங்கப்பட்டது. எல்.ஐ.சி-யும் தீவிரமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது எ‌ன்று அமை‌ச்ச‌ர் இள‌ங்கோவ‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments