Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப‌ரிமலை‌யி‌ல் வருடா‌ந்‌திர ‌விழா: 11 ஆ‌ம் தே‌தி நடை ‌திற‌ப்பு!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (11:18 IST)
சப‌‌ரிமல ை அ‌ய்ய‌ப்ப‌ன ் கோ‌யி‌லி‌ல் வருடா‌ந்‌திர 10 நா‌ள் ‌விழா‌ வரு‌கிற 11 ஆ‌ம் தே‌தி துவ‌ங்கு‌கிறது.

இத‌ற்காக அ‌‌ன்று அ‌திகாலை மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி சன்னிதான நடையை‌த் திறந்து விளக ்க ேற்றுவார். மறுநாள் காலை கணபதி ஹோமத்துக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி வழ‌ங்க‌ப்படு‌ம்.

வரு‌கிற 11 ஆ‌ம் தே‌தி விழாவுக்கான கொடியை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு ஏற்றுகிறார். உற்சவ பலி 13 ஆ‌ம் தேதி தொடங்கி 20 ஆ‌ம் தேதி நிறைவடையும். 12 ஆ‌ம் தேதி முதல் 20 ஆ‌ம் தேதி வரை ஸ்ரீபூத பலியும் நடக்கிறது. மற்ற பூஜைக‌ள் வழக்கம் போல் நட‌க்கும்.

சரங்குத்தியில் 20 ஆ‌ம் தேதி நள்ளிரவு பள்ளிவேட்டையு‌‌ம், பம்பை நதியில் மறுநாள் 21 ஆ‌ம் தேதி சுவாமி அய்யப்பன் அவதரித்த பங்குனி உத்திரம் விழாவும், ஆராட்டுத் திருவிழாவும் நட‌க்கும்.

அ‌ன்று காலை 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் ஸ்ரீபலி பிம்பம் ஆராட்டுக் கடவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கு உச பூஜையும், ஆராட்டு பூஜையும் நட‌க்கு‌ம்.

பின்னர் பம்பை கணபதி சன்னதியில் சுவாமி வைத்திருக்கப்படும். பிறகு அங்கிருந்து சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு.. தேர்வு செய்பவர்களுக்கு மாதம் ரூ.1000..!

வக்பு திருத்த மசோதா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பா? என்ன காரணம்?

அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை.. கடனை குறைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்..!

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

Show comments