Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (10:17 IST)
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 41 ‌விழு‌க்கா‌ட்டில் இருந்து 47 ‌விழு‌க்காடாக உயர்த்துவதற்கு ம‌த்‌திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய
செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வு 2008 ஜனவரி முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்றும், இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 3,297 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் அவர் கூறினார்.

இந்த அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். சுமார் 50 லட்சம் பேர் இதனால் பயன் அடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments