Webdunia - Bharat's app for daily news and videos

Install App

69 ‌விழு‌க்காடு குழந்தைகளுக்கு இரத்தசோகை!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (11:44 IST)
நமது நா‌ட்டி‌ல் 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 69.5 ‌ விழு‌க்காடு குழந்தைகள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவ‌ர் அளித்த பதிலில், இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 63 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர் நகர்ப்புறங்களையும், 71.5 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர் கிராமப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

" இரத்தசோகை, பன்முகத்தன்மை கொண்ட பிரச்சனையாகும். போதுமான அளவில் இரும்புச்சத்துள்ள உணவைச் சாப்பிடாதது, பயறு வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை அடங்கிய உணவை உட்கொள்ளாதது, குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து கருத்தரிப்பது, அழற்சியால் பாதிப்பு, தவறான பாலூட்டும் முறைகள் போன்ற பல்வேறு காரணங்களால் இரத்தசோகை பரவலாக காணப்படுகிறது.

இக்காரணங்களுடன், எழுத்தறிவின்மை, வறுமை, பொதுவான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி தொடர்புடைய காரணங்களாலும் நம் நாட்டு மக்களிடையே இரத்தசோகை பா‌தி‌ப்பு ‌விழு‌க்காடு அதிகமாக இருக்கிறத ு" எ‌ன்று டாக்டர் அன்புமணி மேலும் தெர ி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments