Webdunia - Bharat's app for daily news and videos

Install App

61 வேட்டைக்காரர்கள் கும்பலாக சரண்!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (18:53 IST)
அஸ்ஸாமின் மனாஸ் தேசிய பூங்காவைச் சேர்ந்த வனத்துறையிடம் 61 வன உயிரின வேட்டைக்காரர்கள் சரணடைந்தனர்.

பிரம்மபுத்ரா நதியை ஒட்டி அமைந்துள்ள மனாஸ் தேசிய பூங்கா 500 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. கடந்த 1990-ம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்ப்ட்ட இந்த வனப்பகுதியில் 1980 முதல் 1995-ம் ஆண்டிற்குள் 64 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. கிட்டதட்ட காண்டாமிருகத்தின் வம்சமே அழிந்ததால ், ' உலக பாரம்பரியமிக்க இடம் அபாய கட்டத்தை எட்டியுள்ளத ு' என்று யுனஸ்கோ கூறியத ு.

தேசிய பூங்காவை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சி எடுக்கப்பட்டாலும் வன உயிரினங்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுவது நின்றபாடில்லை. யான ை, புல ி, காண்டாமிருகம் ஆகிய விலங்குகளை அதிகம் கொண்டிருந்த மனாஸ் தேசிய பூங்கா வேட்டைக்காரர்களின் அராஜகத்தால் பொழிவிழந்துள்ளது.

இந்நிலையில ், வேட்டைக்காரர்களாக முன்வந்து வனத்துறை அதிகாரிகளிடம் சரணடைந்து வருகின்றனர். நேற்று 61 வன உயிரின வேட்டையர்கள் 26 நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். கும்பலாக வேட்டையர்கள் சரணடைவது கடந்த இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறை. கடந்த 2006-ம் ஆண்டில் 130 வேட்டையர்கள் கும்பலாக சரணடைந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments