Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் உட‌ன்பாடு: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாப‌‌ஸ்!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (12:36 IST)
ம‌த்‌திய அரசுட‌ன் ஏ‌ற்ப‌ட்ட பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் உட‌ன்பாடு ஏ‌ற்ப‌ட்டதை தொட‌ர்‌ந்து வேலை ‌நிறு‌த்த‌த்தை வங்கி ஊழியர்கள் வாப‌ஸ் பெ‌ற்று‌ள்ளன‌ர்.

காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய திட்டத்தில் சேர அனைத்து ஊழியர்களுக்கும் வாய்ப்பு அளித்தல், பணிக் காலத்தில் உயிர் இழக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குதல், வங்கி பணிகளை தனியாருக்கு விடக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை ம‌த்‌‌திய அரசு ‌நிறைவே‌ற்ற‌க் கோ‌ரி இன்றும் (திங் க‌ள்), நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்கும் முயற்சியாக மத்திய தொழிலாளர் நலத்துறை தலைமை ஆணையர் முகோபாத்யாயா கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து வங்கி ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து நட‌த்‌திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்றும், நாளையும் ஆகிய இரு நாட்கள் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு படுவதாக அ‌றி‌வி‌‌த்‌திரு‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மத்தி ய அரசுடன ் நடத்தி ய பேச்ச ு வார்த்தையில ் உடன்பாட ு ஏற்பட்டதால ் வேலை ‌ நிறு‌த்த‌‌த்தை வங்க ி ஊழியர் க‌ள் கை‌வி‌‌ட்டு‌ள்ளன‌ர். இத ு குறித்த ு அகி ல இந்தி ய வங்க ி ஊழியர்கள ் சங் க பொத ு செயலர ் வெங்கடாசலம ், மத்தி ய அரசுடன ் நடத்தி ய பேச்ச ு வார்த்தையில ் உடன்பாட ு ஏற்பட்டுள்ளதால ் வங்கிகள ் வழக்கம ் போ ல செயல்படும ் என அ‌‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments