Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நலிவடைந்த பிரிவினருக்கு நிதி சேவை வழங்க நிதியங்கள்: ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (11:05 IST)
நிதி உள்ளடக்க நிதியத்திற்கு ஐந்தாண்டு காலத்தில் அதிகபட்ச தொகையாக ரூ.200 கோடியு‌ம ், நிதி உள்ளடக்க தொழில்நுட்ப நிதியத்திற்கு ஐந்தாண்டு காலத்தில் அதிகபட்சம் ரூ.200 கோடி வழ‌ங்கவு‌ம ் ம‌‌த்‌தி ய அரச ு முடிவ ு செய‌்து‌ள்ளத ு.

நிதி உள்ளடக்க நிதியம், நிதி உள்ளடக்க தொழில்நுட்ப நிதியம் ஆகியவை அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 2006-07ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அறிவித்திருந்தார். இந்த நிதியம் ஒவ்வொன்றும் ரூ.500 கோடி அளவிலானது.

மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி ஆகியவை இந்த நிதியங்களுக்கான நிதி ஆதாரங்களுக்கு துவக்கத்தில் பங்களிப்பு செய்யும்.

நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் ஆகியோருக்கும் பின்தங்கிய பிராந்தியங்கள் மற்றும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அதிக அளவில் நிதி சம்மந்தமான சேவை வழங்க உதவும் மேம்பாடு மற்றும் ஊக்கப் பணிகளுக்கு ஆதரவு தரும் வகையில் நிதி உள்ளடக்க நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் முதலீட்டை அதிகரிப்பதற்காக நிதி உள்ளடக்கிய தொழில்நுட்ப நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் ஆகியோருக்கு குறைந்த செலவில் போதுமான கடன் வசதியும், நிதி சேவைகளும் காலத்தோடு கிடைப்பதை இந்த நிதியங்கள் உறுதி செய்யும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments