Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களு‌க்கான ர‌யி‌ல்வே ‌நி‌‌தி‌நிலை அ‌றி‌க்கை: அமை‌ச்ச‌ர் வேலு!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (20:30 IST)
இ‌ந்த ஆ‌ண்டு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்பட உ‌‌ள்ள ர‌யி‌ல்வே ‌நி‌‌தி‌நி‌லை அ‌றி‌க்கை ம‌க்களு‌க்கான ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையாக இரு‌க்கு‌ம் எ‌ன்று ம‌த்‌‌திய ர‌யி‌ல்வே‌த் துறை இணையமை‌ச்ச‌ர் வேலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த ஆ‌ண்டி‌ற்கான ர‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை வருகிற 27 ஆ‌ம் தே‌தி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ம‌த்‌திய ர‌யி‌ல்வே அமை‌ச்ச‌ர் லாலு ‌பிரசா‌த் யாத‌வ் தா‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர்.

அடு‌த்த ஆ‌ண்டு நாடாளும‌ன்ற‌‌த் தே‌ர்த‌ல் வர‌விரு‌ப்பதா‌ல், கட‌ந்த ஆ‌ண்டை‌ப் போல இ‌ந்த முறையு‌ம் ர‌யி‌ல் க‌ட்டண உய‌ர்வு இரு‌க்காது எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இது கு‌றி‌த்து ர‌யி‌ல்வே‌த் துறை இணையமை‌ச்ச‌ர் வேலு கூறுகை‌யி‌ல், 2- ம் வகுப்ப ு‌‌ப் பய‌ணிக‌ள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆ‌கியவை உயர வா‌ய்‌ப்‌பி‌ல்லை எ‌ன்று‌ம், ஏ.சி.முதல் வகுப்ப ு, ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணங்கள் சிறிதளவு குற ைய வா‌ய்‌ப்பு‌ள்ளது எ‌ன்று‌‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ர‌யி‌ல்வே அ‌திகா‌ரிக‌ள் கூறுகை‌யி‌ல், " ரயில்களில் இட நெருக்கடியை குறைக்கும் வகையில் கூடுதலாக ஜன்னல் ஓர படுக்கை வசதிகள் அறிமு க‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம். இது தவி ர, பீகார் உள்பட வட மாநிலங்களை இணைக்கும் வகையிலும், தென் மாநிலங்களிலும் புதிய ரயில்கள் விடுவதற்கான அறிவிப்பு வெளிய ாகு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

சென்னை, மும்பை உள்பட பெரு நகரங்களில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் நெரிசல் ஏற்படுவதால் கூடுதல் ரயில்கள் இயக்குவது, ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற அறிவிப்புகள் வெளிய ாகு‌ம்" எ‌ன்றன‌ர்.

மேலு‌ம், சதாப்த ி, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள ி‌ல் இணைய த ள, செய‌ற்கை‌க் கோ‌ள் தொலை‌க்கா‌ட்‌சி வசதிகள ், பயண‌ச்‌‌சீ‌ட்டு பெறுவத‌ற்கு‌ப் புதிய ந‌வீன முறைகள் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்‌றி‌ற்கான அற ி‌வி‌ப்புகளு‌ம் வெ‌ளியா‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments