Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொசோவோ சுதந்திர பிரகடணம் மீது முடிவு செய்யவில்லை: இந்தியா!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (20:56 IST)
செர்பியாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக பிரகடணம் செய்துள்ள கொசோவோவை அங்கீகரிப்பது குறித்து இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், “கொசோவோ சுதந்திர நாடாக பிரகடணம் செய்துள்ளதை கவனத்தில் கொண்டுள்ளோம். இப்பிரகடணம் தொடர்பான சட்ட ரீதியான பிரச்சனைகள் பல உள்ளன. அங்கு உருவாகிவரும் சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறோம ்” என்று கூறியுள்ளார்.

“ஒரு நாட்டின் இறைமையும், அதன் எல்லைகளுக்குட்பட்ட பூகோள ஒற்றுமையும் மற்ற நாடுகளால் மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் தொடர்ந்த சீரான நிலைப்பாடு. கொசோவோ பிரச்சனைக்கு ஆலோசனை மூலமும், பேச்சு வார்த்தையின் வாயிலாகவும் தீர்வு காண்ப்பட்டிருக்க வேண்டும ்” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்திய அயலுறவு அதிகாரி தெரிவித்துள்ள இக்கருத்து, கொசோவோ பிரகடணத்தை எதிர்க்கும் நாடுகளின் நிலையை ஒத்ததாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொசோவோ சுதந்திர பிரகடணத்தை செல்லத்தக்கதல்ல என்று ஐ.நா. அறிவிக்க வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது. இதே கருத்தை சீனாவும் பிரதிபலித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments