Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப‌ரிமலை‌யி‌ல் 12 ஆ‌ம் தே‌தி நடை ‌திற‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (11:34 IST)
சப‌ரிமலை அ‌ய்ய‌ப்ப‌ன் கோ‌யி‌லி‌ல் மா‌சி மாத‌ப் பூஜை‌க்காக வரு‌ம் 12- ம் தேதி நடை திறக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் 17-ம் தேதி வரை பூஜைகள் ந ட‌க்கு‌ம்.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அ‌ய ்யப்பன் கோயில் நடையை வரும் பிப். 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி திறந்து நெய் விளக்கு ஏற்றி வைப்பார்.

இதையடு‌த்து, தந்திரி கண்டரரு மகேஸ்வரு அ‌ய்யப்பனின் தவ அலங்காரத்தை களைந்து அபிஷேகம் செய்து மாசி மாத பூஜை நடத்த அ‌ய் யப்பனிடம் உத்தரவு கேட்பார்.

‌ பி‌ன்ன‌ர், இரவு கோயில் நடை அடைக்கப்பட்ட ு, பிப்ரவரி 13-ம் தேதி காலை 5 மணிக்கு நடை திறந்ததும் மாசி மாத பூஜைகள ், நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம் துவங்கி நடைபெறும். ‌ பி‌ன்ன‌ர், வழக்கமான பூஜைகளுடன் காலையில் உதயஸ்தமன பூஜ ை, இரவு படி பூஜை நடைபெறும்.

பிப். 17-ம் தேதி பகலில் அ‌ய் யப்பனுக்கு களபாபிஷேகம் நடைபெறும். இரவு அ‌ய் யப்பனை தவ அலங்காரம் செய்த ு, பூஜைகளை நிறைவு செய்து ஹரிவராஸனம் பாடி நடை அடைக்கப்படும்.

மாசி மாத பூஜைக்கு சபரிமலை வரும் பக்தர்களுக்கு பத்தனம்திட்ட ா, எருமேல ி, திருவனந்தபுரம ், கொட்டாரக்கர ை, பந்தளம ், செங்கனூரில் இருந்து பம்பைக்கு பேரு‌ந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments