Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 பேர் உ‌ள்ள ‌கிராமங்களுக்கும் மின்வசதி: ம‌த்‌திய அரசு!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (10:44 IST)
ராஜிவ் காந்தி கிராம மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் 100 பேர் வசிக்கும் சிறு கிராமங்களுக்கும் மின்வசதி அளிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

புது டெ‌ல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்ட ே, " இதற்கு முன்னர் இந்த திட்டத்தின் கீழ் 300 அல்லது அதற்கும் கூடுதலாக மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் மட்டும் ராஜிவ் காந்தி கிராம மின்மயமாக்கல் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வந்த ன" என்றார்.

மேலு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல ், "2005 ஏப்ரல் மாதத்தில் துவக்கப்பட்ட இந்த திட்டம் 2009-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கு மின்வசதியை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்திலும் தொடருவதற்காக இம்மாதம் 3-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான மூலதன மானியம் ரூ.28 ஆயிரம் கோடி. 10-வது திட்ட காலத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மூலதன மானியமாக ரூ.5 ஆயிரம் கோடியை அரசு அனுமதித்திருந்தது.

ராஜிவ் காந்தி கிராம மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமங்களுக்கு குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரத்திற்காவது மின்சாரம் விநியோகம் செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

11- வது திட்ட காலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த செலவு, இணைப்பு ஒன்றுக்கு ரூ.1,500-லிருந்து ரூ.2,500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 45,602 கிராமங்கள் இதுவரை மின்வசதி பெற்றுள்ளன. 22.87 லட்சம் கிராம வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 18.76 லட்சம் வீடுகள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுடையதாகும ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments