Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசோன் படலத்தை பாதிக்கும் வாயுக்களை இறக்குமதி செய்தவர் கைது!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (10:47 IST)
ஓசோன் படலத்தை பாதிக்கும் தடை செய்யப்பட்ட வாயுக்களை இறக்குமதி செய் த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த இவர் ரூ.60 லட்சம் மதிப்புடைய ஓசான் படலத்தை பாதிக்கும் வாயுக்களை மற்ற பொருட்களுடன் கலந்து சட்டவிரோதமாக கொண்டு வந்துள்ளார்.

போலி பெயர்களில ், அவருக்கு தெரிந்தவர்களின் பெயர்களில் மேலும் இரண்டு நிறுவனங்களை துவக்கி வர்த்தகம் புரிந்து வந்ததும் வருவாய் புலனாய்வு பிரி‌வி‌ன‌ர் ‌நட‌த்‌திய ‌விசாரைண‌யி‌ல் தெரியவந்தது. எல ். ஜ ி. சிறிய குளிர்சாதன பெட்டிகள், வேக்குவம் பம்புகள், கம்ரஷர் ஆயில் போன்றவற்றை இவர் இறக்குமதி செய்து வந்துள்ளார். அவற்றுடன் ஓசான்படலத்தை பாதிக்கும் வாயுக்கள் நிரப்பப்பட்ட 13 கிலோ மற்றும் 22 கிலோ சிலிண்டர்களையும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்துள்ளார்.

தடை செய்யப்பட்ட வாயு சிலிண்டர்கள் மற்றும் இதர பொருட்கள் அடங்கிய மூன்று பெட்டிகளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். 2003ம் ஆண்டிலும் இதேபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் இந்த நபர் ஈடுபட்டிருக்கிறார் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

1962- ம் ஆண்டு சுங்கவரிச் சட்டம் மற்றும் இறக்குமதி ஏற்றுமதி கொள்கை‌யி‌ன் ‌கீ‌ழ் இத்தகைய வாயுக்க‌ள் இறக்குமதி செய்வத‌ற்கு‌த் தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments