Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான‌ம் கட‌த்‌திய 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:30 IST)
கந்தகார ் விமா ன கடத்தல ் தொடர்பா க கைத ு செய்யப்பட் ட 3 பேருக்க ு ஆயுள ் தண்டன ை வழங்க ி பாட்டியால ா நீதிமன்றம ் இன்ற ு தீர்ப்பளித்தத ு.

கடந்த 1999 ஆம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி 189 பேரை ஏற்றிக்கொண்டு காட்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி-814 விமானத்தை போலி பாஸ்போர்ட்டில் பயணித்த தீவிரவாத கும்பல் கடத்தியது. பாகிஸ்தானின் லாகூரில் எரிபொருள் நிரப்பிய பிறக ு, க‌ந்தகார ுக்கு கடத்தி சென்றனர்.

ஒருவாரகாலமாக விமானத்தை சிறைபிடித்த கும்பல், ஜெய்ச ி- ஈ-முகமது தலைவர் மௌலானா மசூத் அசார ், அகமது ஜர்கர ், ஷேக் அகமது ஒமர் சயத் ஆகிய மூன்று தீவிரவாதிகளை விடுதலை செய்த பிறக ே, விமானத்தை விடுவித்தது. எனினும ், புதியதாக திருமணமான ருபன் கத்யால் (25) என்பவர் கொல்லப்பட்டார்.

இந்த விமான கடத்தல் சம்பவம் தொடர்பாக 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அப்துல ் லதிப ், தலிப் குமார ், யுசுப் நேபாலி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து 120 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டத ு.

எட்டு ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித் த பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments