Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌‌ல், டீச‌ல் ‌விலை உய‌ர்வு: ம‌த்‌திய அமை‌ச்சரவை இ‌ன்று முடிவு!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (13:43 IST)
பெ‌‌ட்ரோ‌ல ், டீச‌ல் உ‌ள்‌ளி‌ட்ட பெ‌ட்ரோ‌‌லிய‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வு கு‌றி‌த்து அமை‌ச்ச‌ர்க‌ள் குழு வழ‌ங்‌கியு‌ள்ள ப‌ரி‌ந்துரைக‌ளி‌ன் ‌மீத ு ‌ பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யி‌ல் இ‌ன்று கூடவு‌ள்ள ம‌த்‌திய அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் இறு‌தி முடிவு எடு‌க்க‌ப்ப‌டு‌ம் எ‌ன்று எதிர்பார்க்கப்படு‌கிறது.

ச‌ர்வதேச‌ச் ச‌ந்தை‌யி‌ல் க‌ச்சா எ‌ண்ணை ‌விலை உய‌ர்‌ந்து வருவதா‌ல் பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல், சமைய‌ல் எ‌ரிவாயு ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விலையை உய‌ர்‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று பெ‌ட்ரோ‌லிய ‌நிறுவன‌ங்க‌ள் ‌விடு‌த்து‌ள்ள கோ‌ரி‌க்கை ப‌ற்‌றி முடிவெடு‌ப்பத‌ற்கா க, ம‌த்‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தலைமை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்ட அமை‌ச்ச‌ர்க‌ள் குழு பலமுறை கூடி ‌விவா‌தித்‌தது. இரு‌ந்தாலு‌ம் எ‌ந்த முடிவு‌ம் எடு‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

பெ‌ட்ரோ‌‌ல் ‌விலையை ‌லி‌ட்டரு‌க்கு ரூ.2 முத‌ல் ரூ.4 வரையு‌ம ், டீச‌ல் ‌விலையை ‌லி‌ட்டரு‌க்கு ரூ.1 முத‌ல் ரூ.2 வரையு‌ம் உய‌ர்‌த்துவத‌ற்கு ப‌ரி‌ந்துரை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. அதேநேர‌த்‌தி‌ல ், பெ‌ட்ரோ‌லிய‌த் துறை அமை‌ச்ச‌ர் முர‌ளி ‌தியோர ா, அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜ ி, வேளா‌ண் துறை அமை‌ச்ச‌ர் சர‌த் பவா‌ர் ஆ‌கியோ‌ர் சமைய‌ல் எ‌ரிவாயு‌வி‌ன் ‌விலையை உய‌ர்‌த்துவத‌ற்கு எ‌‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மேலு‌ம், ‌விலை உய‌ர்வு‌க்கு‌‌ப் ப‌திலாக வ‌ரிகளை‌க் குறை‌ப்பது போ‌ன்ற மா‌ற்று வ‌ழிக‌ள் ‌சிலவ‌ற்றை அமை‌ச்ச‌ர்க‌ள் முர‌ளி ‌தியோர ா, ‌ பிரணா‌ப் முக‌ர்‌ஜி ஆ‌கியோ‌ர் ப‌ரி‌ந்துரை‌த்தன‌ர். ஆனா‌ல ், இத‌ற்கு ம‌ற்ற அமை‌ச்ச‌ர்க‌ள் எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர். இ‌வ்வாறு குழ‌ப்பமான சூழ‌ல் ‌‌‌‌‌நில‌வியதா‌ல்‌, ‌விலை உய‌ர்வு கு‌றி‌த்து முடிவெடு‌க்கு‌ம் பொறு‌ப்பை ம‌த்‌திய அமை‌ச்சரவை‌யிட‌ம் ‌ஒ‌ப்படை‌ப்பதாக அமை‌ச்ச‌ர்க‌ள் குழு அ‌றி‌வி‌த்தது.

இ‌ந்த‌ப் பர‌பர‌ப்பான சூழ‌லி‌ல் ம‌த்‌திய அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌ம் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யி‌ல் இ‌ன்று மாலை 4 ம‌ணி‌க்கு‌க் கூடு‌கிறது. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் அமை‌ச்ச‌ர் குழு‌வி‌ன் ப‌ரி‌ந்துரைக‌ள் ப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம ், பெ‌ட்ரோ‌லிய‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌மீதான வ‌ரிகளை‌க் குறை‌ப்பத‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அமை‌ச்சரவை வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments