Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 ‌விழு‌‌க்காடு நெடு‌ஞ்சாலைகள‌் நா‌ன்கு வ‌ழியாக மா‌ற்ற‌ம்: டி.ஆர்.பாலு!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (10:52 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள நெடு‌ஞ்சாலைக‌ளி‌ல ் 60 ‌ விழு‌க்காட ு நா‌‌ன்க ு வ‌ழி‌‌ச்சாலைகளா க மா‌ற்ற‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு எ‌ன்ற ு மத்திய கப்பல் சாலைப் போக்குவரத்த ு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ட ி. ஆர ். பாலு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3-வது அரங ்‌ கி‌ன ் துவ‌க் க ‌ விழா‌வி‌ல ் அவ‌ர ் பேசுகை‌யி‌ல ், " சாலைப் பணிகள் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது. இந்தியாவில் சாலைப் பணிகளுக்கு ரூ.1 செலவிடும் போது பொருளாதாரத்தில் ரூ.7 வளர்ச்சி ஏற்படுகிறது என்று உலக வங்கி ஒரு கணக்கை கூறியுள்ளது. இதனடிப்படையில் தங்கநாற்கரச் சாலை, கிழக்கு-மேற்கு, தெற்கு-வடக்கு இணைப்புச் சாலைப் பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் பணிகள் 2011-12-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறத ு" எ‌ன்றா‌ர்.

"10 ‌ விழு‌க்காடு உ‌ள்நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி வள‌ர்‌ச்‌சியை (ஜி.டி.பி.)எட்டுவதற்கு கப்பல் துறை அமைச்சகம் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறைகளில் 60 ‌விழு‌க்காடு நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுவிட்டது.

இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும் 187 சிறிய துறைமுகங்களும் உள்ளன. இவற்றின் கொள்ளளவு 600 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது. தேவை மிக அதிகமாக உள்ளதா‌‌ல், இதை 1,500 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுட‌ன், இதற்காக ரூ.1,60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளத ு" எ‌ன்றா‌ர் டி.ஆ‌ர் .பாலு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments