Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகள் பாதுக்காப்பு திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (20:28 IST)
நாடு முழுவதிலும் எட்டு வன உயிரின சரணாலயங்களில் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.600 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது. இதற்கு சான்றா க, சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அங்கு பணத்திற்காக புலிகள் கொன்று குவிக்கப்பட்டது கண்டறியப்பட்டத ு. ஆனால ், புலிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக இன்றும் தவறான தகவல்கள் அளிக்கப்படுகின்ற ன.

இத்தனைக்கும் சரிஸ்கா 1978ஆம் ஆண்டே புலிகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால ், தேசிய விலங்கான புலியின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதை வன உயிரின ஆர்வலர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தனர்.

இதனையடுத்த ு, மத்திய அரசு புலிகள் பாதுகாப்பு (புராஜகட் டைகர்) திட்டத்தை நாடு முழுவதிலும் விரிவுபடுத்தி வருகிறது. எனினும ், அறிவிப்பு வெளியாகி ஆண்டுகள் பல ஆனாலும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கியபாடில்லை என்ற நிலையே நீடித்து வந்தது.

இந்நிலையில ், 11 வது ஐந்தாண்டு திட்டம் மீதான மத்திய அமைச்சரவையின் பொருளாதார கூட்டத்தொடரில் 8 இடங்களில் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.600 கோடி ஒதுக்கி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மக்களுக்கு வாழ்வாதரங்களை ஏற்படுத்தவும ், வன உயிரினங்கள் குறிப்பாக அழிந்துவரும் புலியினங்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. மலைவாழ் மக்களால் புலிகள் வேட்டையாடப்படுவதை தடுக் க, பாதுக்காப்பட்ட வனப்பகுதிககு அப்பால் அவர்களை குடியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வனக்குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க புலிகள் பாதுகாப்பு படைக்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. பொதுவாக புலிகளை பாதுக்காக்கவும ், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அனைத்துவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ள இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

Show comments