Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறு‌நீரக மோசடி ‌விவகார‌த்‌தி‌ல் ம.பு.க. ‌விசாரணை: அ‌ன்பும‌ணி தகவ‌ல்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:13 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் அ‌ண்மை‌யி‌ல ் நட‌ந்து‌ள் ள ‌ சிறு‌நீர க மோசட ி கு‌றி‌த்த ு ம‌த்‌திய‌‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ம ் ( ச ி. ப ி.ஐ.) ‌ விசாரண ை நட‌த்து‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய சுகாதார‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் மரு‌த்துவ‌ர ் அ‌ன்பும‌ண ி ராமதா‌ஸ ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " மும்பை, நொய்டா, குர்கான் உள்பட பல்வேறு நகரங்களில் சிறுநீரக மோசடி நடந்திருக்கிறது. எனவே இது குறித்து ம. ப ு.க. விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படும ். வரு‌கி‌ன் ற நாடாளுமன்ற ‌நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌‌க ் கூ‌ட்டத் தொடரின்போது தேசிய உறுப்பு மாற்று சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படும்"என்றா‌ர ்.

மேலு‌ம், "இ‌த்‌திரு‌த்த‌த்‌தி‌ன் மூலம் சட்ட விதிகள் எளிமையாக்கப்படும். நாட்டில் நடக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அனைத்தையு‌ம் ஒளிவு மறைவற்ற வகைய‌ி‌ல் இணையதளத்தில் பதிவு செய்ய நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம். உறுப்பு தானம் செய்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் பிர‌ச்சாரம் நடத்தப்படும்" என்றா‌ர் அ‌ன்பும‌ணி.

கு‌ர்கா‌னி‌ல் ‌சி‌க்‌கிய மோசடி‌க் கு‌ம்ப‌ல் சுமார் 600-க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகத்தை திருடி பெரும் தொகைக்கு விற்றுள்ளது அ‌ண்மை‌யி‌ல் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது.

நாடு முழுவதும் பரவியுள்ள, மரு‌த்துவ‌ர் ஹமீத்குமார் தலைமையிலான இந்த மோசடிக் கும்பலை‌த் தேடு‌ம் பணி ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. ஹ‌ரியானா‌ த‌னி‌ப்படை காவல‌ர்க‌ள் தமிழக‌ம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு விரைந்துள்ள நிலையில், இந்த வழக்கு ம.பு.கவுக்கு மாற்றப்படுவதால் அதிர்ச்சிகரமான பல தகவ‌ல்க‌ள் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments