Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய நாட்டுப்புற நடன விழா இ‌ன்று துவ‌க்க‌ம்!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (11:15 IST)
குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியா க, டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌க்கு‌ம ் தே‌சி ய நா‌ட்டு‌ப்‌பு ற நடன‌ விழாவ ை இ‌ன்ற ு குடியரச ு தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் துவ‌க்‌க ி வை‌க்‌கிறா‌ர ்.

மத்திய கலாச்சார அமைச்சகம், 7 கலாச்சார மண்டல மையங்களுடன் இணைந்து தேசிய நாட்டுப்புற நடனவிழாவை இ‌ன்ற ு முதல் இம்மாதம் 29 ஆம் தேதிவரை நடத்துக ி‌ றத ு.

குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த விழா புது டெ‌ல்‌லியில் ந ட‌ க்‌கிறத ு. லோக்தரங் என்று அழைக்கப்படும் இந்த விழாவின் சின்னம் மயில் ஆகும். மத்திய கலாச்சார அமைச்சகம் ஆண்டுதோறும் இந்த விழாவை நடத்தி வருகிறது. நமது நாட்டின் செறிவுமிக்க கலாச்சார பாரம்பரியத்தை நாட்டுப்புற நடனங்களின் வாயிலாக எடுத்துரைப்பதே இந்த விழாவின் நோக்கமாகும்.

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆடப்படும் வண்ணமிகு, துடிப்பான, தொன்மையான நடனங்களை ஒருங்கே பார்த்து ரசிக்கும் வாய்ப்பை இந்த விழா பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது. தேசிய நாட்டுப்புற நடன விழாவை குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் இ‌ன்ற ு புது டெ‌ல்‌லியில் துவக்கி வைக்கிறார்.

இந்த விழாவிற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர ் அம்பிகா சோனி தலைமை வகிக்கிறார். இந்த விழாவில் 28 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 42 வகை நாட்டுப்புற நடனங்கள் நடைபெறவுள்ளன. சுமார் 700 நாட்டுப்புற கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்க இருக்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments