Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவினைக் கலைஞர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் அ‌றிமுக‌ம்!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (11:19 IST)
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அபிவிருத்தி ஆணையர் (கைவினைப் பொருட்கள்) அலுவலகமும், ஐ. ச ி.ஐ. ச ி.ஐ. லாம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து கைவினைக் கலைஞர்களுக்கான உடல் ந ல‌ க ் கா‌ப்‌பீ‌ட்டு‌த்‌ திட்டத்தை துவக்கியுள்ளன. ராஜீவ்காந்தி சில்பி சுவஸ்தயா பீமா யோஜனா என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் கைவினைக் கலைஞர்களு‌ம ் அவர்க‌ளி‌ன ் குடும் ப‌ த்தாரு‌ம ் பய‌ன்பெறலா‌ம ்.

கைவினைப் பொருட்களுக்கான அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் வழங்கியுள்ள அடையாள அட்டையை வைத்திருக்கும் கலைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதியுடையவர்களாவர். இத்திட்டத்தின் கீழ், வெளி நோயாளியாகவோ, மருத்துவமனையில் சேர்ந்தோ சிகிச்சை பெறும் போது ஆகும் செலவினை கைவினை கலைஞர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் வரை வழங்கப்படும். கைவினைக் கலைஞர், அவரின் மனைவி, கணவர், இரண்டு குழந்தைகள் ஆகியோருக்கான செலவு இதில் அடங்கும். விபத்தினால் ஊனமுற்றாலோ, மரணமடைந்தாலோ ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேருவதற்கான ஆண்டு பிரிமியம் ரூ.800 ஆகும். இதில் பொது பிரிவில் உ‌ள் ள பயனாளிகள் வருடந்தோறும் ரூ.150 செலுத்தினால் போதும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர ், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.75 செலுத்தினால் போதுமானது. இந்த இரு பிரிவுகளிலும் மீதியுள்ள தொகையான ரூ.650 மற்றும் ரூ.750ஐ மத்திய அரசு செலுத்திவிடும். ராஜீவ்காந்தி சில்பி சுவஸ்தயா பீமா யோஜனா திட்டத்தில் ஒரு வயது முதல் 80 வயது வரை உ‌ள்ளவ‌ர்க‌ள ் சேர முடியும்.

இத்திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் பிற விவரங்களை கீழ்கண்ட முகவரியில் அஞ்சல் மூலமோ, நேரிலோ தொடர்பு கொண்டு பெறலாம்: உதவி இயக்குனர், கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை விரிவாக்க மையம், அபிவிருத்தி ஆணையர் (கைவினை பொருட்கள்) அலுவலகம், இந்திய அரசு, மத்திய ஜவுளி அமைச்சகம், 129, ஜோஸ்வா தெரு, ராஜ் நகர், நாகர்கோவில். தொலைபேசி: 04652-232361.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments