Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (19:14 IST)
திரிபுராவில் பிப்ரவரி 23 ஆம் தேதியும ், மேகாலயாவில் மார்ச் 3 ஆம் தேதியும ், நாகாலாந்தில் மார்ச் 5 ஆம் தேதியும் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தலைநகர் டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவத ு:

திரிபுராவில் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 6. வேட்புமனுப் பரிசீலனை நாள் பிப்ரவரி 7. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 9.

இங்கு வாக்குப் பதிவு பிப்ரவரி 23 ஆம் தேதியும ், வாக்கு எண்ணிக்கை மார்ச் 7 ஆம் தேதியும் நடக்கும்.

மேகாலயாவில வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 15. வேட்புமனுப் பரிசீலனை நாள் பிப்ரவரி 16. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 18.

இங்கு வாக்குப் பதிவு மார்ச் 3 ஆம் தேதியும ், வாக்கு எண்ணிக்கை மார்ச் 7 ஆம் தேதியும் நடக்கும்.

நாகாலாந்தில் வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 16. வேட்புமனுப் பரிசீலனை நாள் பிப்ரவரி 18. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20.

இங்கு வாக்குப் பதிவு மார்ச் 5 ஆம் தேதியும ், வாக்கு எண்ணிக்கை மார்ச் 8 ஆம் தேதியும் நடக்கும்.

இந்த மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவை தவி ர, இந்த ஆண்டில் கர்நாடக ா, மத்தியப் பிரதேசம ், சட்டீஸ்கர ், ராஜஸ்தான ், டெல்லி சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments