Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவ‌ர், ஆளுந‌ர்களு‌க்கு ஊ‌திய‌ம் இருமட‌ங்கு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (17:01 IST)
குடியரசு‌த் தலைவ‌ர ், துணை‌க் குடியரசு‌த் தலைவ‌ர ், ஆளுந‌ர்க‌ள் ஆ‌கியோரு‌க்கு ஊ‌திய‌த்தை இருமட‌ங்‌கி‌ற்கு மே‌‌ல் அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு ம‌த்‌திய அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல் வழ‌ங்‌கியு‌ள்ளது.

ம‌த்‌திய அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌ம் டெ‌‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌‌ன் ‌சி‌ங் தலைமை‌யி‌ல் நட‌ந்தது. இ‌க் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஊ‌திய‌ம் தொட‌ர்பாக‌‌ப் ‌ப‌ல்வேறு மு‌க்‌கிய முடிவுக‌ள் எடு‌‌க்க‌ப்ப‌ட்டன.

இதுகு‌றி‌த்து நா‌டாளும‌ன்ற ‌விவாகர‌த் துறை அமை‌ச்ச‌ர் ‌பி‌ரிய ர‌ஞ்ச‌ன் தா‌ஸ்மு‌ன்‌ஷி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெ‌ரி‌வி‌த்ததாவத ு:

குடியரசு தலைவ‌‌ரி‌ன் ஊ‌திய‌ம் மாத‌த்‌தி‌ற்கு ரூ.50,000 ‌த்‌தி‌லிரு‌ந்து ரூ.1,00,000 மாக அ‌திக‌ரி‌க்க‌ப்படு‌கிறது. துணை‌க் குடியரசு‌த் தலைவ‌ரி‌ன் ஊ‌திய‌ம் மாத‌த்‌தி‌ற்கு ரூ.40,000 ‌த்‌தி‌லிரு‌ந்து ரூ.85,000 மாக உய‌ர்‌த்த‌ப்படு‌கிறது.

இதேபோல ஆளுந‌ர்க‌ளி‌ன் ஊ‌தியமு‌ம் மாத‌த்‌தி‌ற்கு ரூ.36,000 ‌த்‌தி‌லிரு‌ந்து ரூ.75,000 மாக உய‌ர்‌த்த‌ப்படு‌கிறது.

இ‌ந்த ஊ‌திய உய‌ர்வுக‌ள் அனை‌த்து‌ம் 2007 ஆ‌ம் ஆ‌ண்டு ஜனவ‌ரி 1 ஆ‌ம் தே‌தி‌ப்படி முன் தே‌தி‌யி‌ட்டு நடைமுறை‌க்கு வரு‌கிறது.

மேலு‌ம ், மு‌ன்னா‌ள் குடியரசு‌த் தலைவ‌ர்க‌ளி‌ன் ஓ‌ய்வூ‌திய‌ம் ஆ‌ண்டு‌க்கு ரூ.3,00,000 ‌த்‌தி‌லிரு‌ந்து ரூ.6,00,000 மாக உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்பு நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட குடியரசு தலைவரை ‌விட அ‌திகமாக ஊ‌திய‌ம் பெ‌ற்று வ‌ந்தன‌ர். இதை‌க் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு குடியரசு‌த் தலைவ‌ரி‌ன் ஊ‌திய‌த்தை உய‌ர்‌த்த ஒரு ஆ‌ண்டு‌க்கு மு‌ன்னரே ஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்டது.

ஆனா‌ல ், ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்த‌ல்க‌ள் வ‌ந்த காரண‌த்‌தினா‌ல ், இ‌ப்போது தா‌ன் அத‌ற்கு ம‌த்‌திய அமை‌ச்சரவை‌யி‌ன் ஒ‌ப்புத‌ல் ‌கிடை‌த்து‌ள்ளது.

இ‌வ்வாறு அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments