Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌‌ஷ்‌மீ‌‌ர்: ப‌னி‌ச்ச‌ரி‌வி‌ல் புதை‌ந்து ராணுவ‌த்‌தின‌ர் உ‌ட்பட 20 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (16:56 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌‌ரி‌ல் எ‌ல்லை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க் கோ‌‌ட்டி‌‌ற்கு அரு‌கி‌ல் உ‌ள்ள மலை‌ப் பகு‌திக‌ளி‌‌ல் ஏ‌ற்ப‌ட்ட ப‌னி‌ச்ச‌ரி‌வி‌ல் ‌சி‌க்‌கி ராணுவ‌த்‌தின‌ர ், சுமை தூ‌க்‌கிக‌ள் உ‌ட்பட 20 பே‌ர் ப‌லியா‌யின‌ர்.

கு‌ப்வாரா ம‌ற்று‌ம் பாரமு‌ல்லா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் கட‌ந்த மூ‌ன்று நா‌ட்களாக பொழிந்து வரும் பனி மழையால் 6 அடி உயர‌த்‌தி‌ற்கு‌ப் ப‌னி‌க்க‌ட்டிக‌ள் குவி‌ந்து ‌கிட‌க்‌கி‌ன்றன. இதனா‌ல் ப‌ல்வேறு மு‌க்‌கிய‌ச் சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

இதனா‌ல ், எ‌ல்லை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க் கோ‌ட்டி‌ற்கு அரு‌கி‌ல் மலை‌‌ச் ச‌ரிவுக‌ளி‌ல் உ‌ள்ள பது‌ங்கு கு‌ழிக‌ளி‌ல் த‌ங்‌கி‌ப் பாதுகா‌ப்பு‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌க்கு‌ம் ராணுவ‌த்‌தினரு‌க்கு கழுதைக‌ள் மூலமாக அ‌த்‌தியாவ‌சிய‌ப் பொரு‌ட்க‌ள் கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், நே‌ற்று ம‌திய‌ம் யூ‌ரி‌யி‌ல் உ‌ள்ள மலை‌ப் பகு‌தியி‌ல் கடுமையான ப‌னி‌ச்ச‌ரிவு ஏ‌ற்ப‌ட்டது. இ‌தி‌ல் 5 ‌ராணுவ‌த்‌தினரு‌ம ், 8 சுமை தூ‌க்கு‌ம் தொ‌ழிலாள‌ர்களு‌ம் ப‌னி‌யி‌ல் புதை‌ந்து ப‌லியா‌யின‌ர். வெகுநேர‌‌ம் ‌நீடி‌த்த தேடுதலு‌க்கு‌ப் ‌பிறகு 2 சுமை தூ‌க்‌கிக‌ள் கவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌ல் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டன‌ர்.

இதையடு‌த்த ு, இ‌ன்று அ‌திகாலை முத‌ல் மேலு‌ம் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் ப‌னி‌ச்ச‌ரிவு ஏ‌ற்ப‌ட்டது. இ‌தி‌ல் 7 ராணுவ‌த்‌தின‌ர் ப‌ணி‌யி‌ல் புதை‌ந்‌திரு‌க்கலா‌ம் எ‌ன்ற கருத‌ப்படு‌கிறது. அவ‌ர்களை‌த் தேடு‌ம் ப‌ணி முடு‌க்‌கி ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், கடுமையான ப‌னி‌ப்பொ‌ழி‌வினா‌ல ், ப‌னி‌யி‌ல் புதை‌ந்து ‌கிட‌க்கு‌ம் உட‌ல்களை ‌மீ‌ட்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக ராணுவ‌த்‌தின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர். இரு‌ந்தாலு‌ம ், இ‌ன்று மாலை‌க்கு‌ள் உட‌ல்களை ‌மீ‌ட்க முடியு‌ம் எ‌ன்ற ந‌ம்‌பி‌க்கை உ‌ள்ளதாகவு‌ம் அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments