Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் 108.6 கோடி டன்னாக உயரும் : டி.ஆர்.பாலு!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (11:25 IST)
சி‌றி ய துறைமுகங்களின் சரக்கு கையாளும் தி ற‌ ன் 108.6 கோடி டன்னாக உயர்த் த‌ ப்படு‌ம ் எ‌ன்று கடல்சார் மாநிலங்கள் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளதா க, மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ட ி. ஆர ். பாலு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கடலோர மாநிலங்கள் வளர்ச்சிக் குழுவின் 9-வது கூட் ட‌ ம ் கோவாவில் நே‌ற்ற ு நடைபெற்றத ு. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌த ் தலைமை தாங்கிய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆர ். பாலு கூறியதாவது:

11 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட் ட கால‌த்‌தி‌ல ், அண்மையில் ஒப்புதல் தரப்பட்ட 'மத்திய மாதிரி சலுகை ஒப்பந்தம ்'- ஐ பயன்படுத்தி பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து கடலோர திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதில் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவு வழங்கும். த‌ற்போத ு இந்திய துறைமுகங்களின் சரக்கு கையாளும் தி ற‌ ன் 73.3 கோடி டன்னா க உ‌ள்ளத ு. இதை 2011-2012-ஆம் ஆண்டுக்குள் 150 கோடி டன்னாக உயர்த்துவதற்காக துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது மிகவும் அவசி ய‌ ம ்.

பெரிய துறைமுகங்கள் தவிர மற்ற துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை 108.6 கோடி டன்னாக உயர்த்துவதற்கு கடல்சார் மாநிலங்கள் உறுதிபூண்டுள்ள ன. ஆந்திர பிரதேசம், கேரளா, ஓரிசா, கோவா ஆகிய மாநிலங்கள் மாநில கடல்சார் வாரியங்களை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அமைக்கவுள்ள ன. மத்திய அர‌சி‌ன ் ஆதரவு பெ‌ற்ற திட்டமான - உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து திட்டத்தை 11-வது திட்ட காலத்திலும் மாநில அரசுகள் தொடர வேண்டும் எ‌ன்று ட ி. ஆர ். பாலு தெரிவித்தார்.

மேலு‌ம ், கடல்சார் துறைகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மாதிரி பயிற்சி மற்றும் சான்றளிக்கும் முறைக்கான நெறிமுறைகளை கடல்சார் மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து தயாரிக்குமாறு கப்பல் போக்குவரத்திற்கான முதன்மை இயக்குனருக்கு ட ி. ஆர ். பாலு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் கடல்சார் துறைக்கான மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் மாநில நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் எம ். ப ி. சுவாமிநாதன் பங்கேற்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments