Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கட்டுமான சட்டம்: மத்திய அரசு பரிசீலனை!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (17:05 IST)
கட்டுமானத் துறை தொடர்புடைய சட்டங்களை ஒன்றிணைத்து தேசிய அளவிலான கட்டுமானச் சட்டத்தை உருவாக்க மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறினார்.

இது தொட‌ர்பாக திருச்சி‌யி‌ல் நட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் அமைச்சர் வேங்கடபதி பேசியதாவது:

உலகின் பொருளாதார வளர்ச்சியில் கட்டுமானத்துறையின் பங்குதான் முதலிடம் வகிக்கிறது. உலக அரங்கில் இந்திய பொருளாதாரம் தற்போது 8 ‌விழு‌க்காடாக முன்னேற்றம் கண்டுள்ளது. இது நீடிக்க வேண்டும்.

கட்டுமான துறையில் உள்ள பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், கட்டுநர்கள் என ஒவ்வொருவரும் தொழில் ரீதியாக ஒவ்வொரு சட்டத்தை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. எனவே, கட்டுமானத் துறை தொடர்புடைய 12 சட்டத்தையும் ஒரே குடையின் கீழ், ஒற்றை சாளர முறையில் கொண்டு வந்து 'தேசிய கட்டுமான சட்டம ்' என மாற்றியமைக்க மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

இதுபற்றிய கருத்துக்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. எல்லா மாநிலங்களும் பின்பற்றும் வகையில் இந்த சட்டம் அமைக்கப்படும் எ‌ன்றா‌ர் வேங்கடபதி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments