Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாவலா‌சி‌ரிய‌ர் ‌நீல ப‌த்மனாபனு‌க்கு சா‌கி‌த்ய அகாதெ‌மி ‌விருது!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2007 (11:51 IST)
தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான நீல பத்மநாபன் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது‌க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.

" இலையுதிர் காலம்' என்ற நாவலுக்காக இந்த விருது தரப்படுகிறது. இது முதியோர் பிரச்னை பற்றிய நாவல். "தலைமுறைகள்', "பள்ளிகொண்டபுரம்' என்ற அவருடைய நாவல்களும் ரசிகர்களால் மிகவும் விரும்பிப ் படிக்கப்படுபவை.

இந்த ஆண்டு 23 படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் நல்ல தேர்ச்சி உள்ள 3 பேர் கொண்ட நடுவர் குழுவால் பரிசுக்குரிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. அவ்விதம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலுக்கு சாகித்ய அகாதெமி தலைவர் பேராசிரியர் கோபிசந்த் நரங் தலைமையிலான நிர்வாகக் குழு தில்லியில் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

நாவல்கள்: விருதுபெறும் நாவலாசிரியர்கள்- புரபி பர்முதோல்(அசாமி), அமர்காந்த்(ஹிந்தி), குமாரி வீரபத்ரப்பா(கன்னடம்), தேவிதாஸ் கடம்கொங்கணி), ஏ.சேதுமாதவன்(மலையாளம்), பி.எம்.மைஸ்னாம்பா(மணிப்புரி), நீல பத்மநாபன்(தமிழ்).

கவிதைகள்: சமரேந்திர சென்குப்தா (வங்காளி), கியான்சந்த் பகோச் (டோக்ரி), ராஜேந்திர சுக்லா (குஜராத்தி), தீபக் மிஸ்ரா (ஒரியா), ஜஸ்வந்த் தீத் (பஞ்சாபி), ஹரிதத் சர்மா (சம்ஸ்கிருதம்).

சிறுகதைகள்: ஜனில் குமார் பிரம்மா (போடோ), ரத்தன்லால் சாந்த் (காஷ்மீரி), பிரதீப் பிகாரி (மைதிலி).

நாடகங்கள்: லட்சுமண் ஸ்ரீமால் (நேபாளி), கேர்வால் சரண் (சந்தாலி), வாசுதேவ் நிர்மல் (சிந்தி).

விமர்சன நூல்க‌ள ்: குந்தன் மல் (ராஜஸ் தானி), வஹாப் அஷ்ரஃபி (உருது)

சரித ை: ஜி.எம். பவார் (மராட்டி)

சுயசரித ை: கடியாரம் ராமகிருஷ்ண சர்மா (தெலுங்கு)

‌ விருதுட‌ன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செப்புப ் பட்டயம் ஆகியவையு‌ம் வழங்கப்படும். விருது வழங்கும் நிகழ்ச்சி புது டெ‌ல்‌லியில் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments