Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜரா‌த் முத‌ல்வராக ‌மீ‌ண்டு‌ம் பத‌வியே‌‌ற்றா‌ர் நரே‌ந்‌திர மோடி!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (16:07 IST)
குஜரா‌த் மா‌நில‌த்‌தி‌ன் மு‌த‌ல்வராக மூ‌ன்றாவது முறையாக நரே‌ந்‌‌திர மோடி இ‌ன்று பத‌வியே‌ற்றா‌ர்.

webdunia photoWD
அகமதாபா‌த்‌தி‌ல் ச‌ர்தா‌ர் ‌வ‌ல்லபா‌ய் ப‌ட்டே‌ல் மைதான‌த்‌தி‌ல் இ‌ன்று ம‌திய‌ம் நட‌ந்த ‌விழா‌வி‌ல ், அ‌ம்மா‌நில ஆளுந‌ர் நவ‌ல் ‌கிஷோ‌ர் ஷ‌ர்மா நரே‌ந்‌திர மோடி‌க்கு பத‌வி‌ப் ‌பிரமாண‌ம் செ‌ய்து வை‌த்தா‌ர்.

இ‌ந்த ‌விழா‌வி‌ல் மு‌ன்னா‌ள் குடியரசு தலைவ‌ர் பைரோ‌ன் ‌சி‌ங் ஷெகாவ‌த ், பா.ஜ.க.வி‌ன் மூ‌த்த தலைவ‌ர்க‌ள் எ‌ல்.கே.அ‌த்வா‌ன ி, ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங ், முர‌ளி மனோக‌ர் ஜோ‌ஷ ி, தே‌சிய மு‌ற்போ‌க்கு‌‌க் கூ‌ட்ட‌ணி‌யி‌ன் ஒரு‌‌ங்‌கிணை‌ப்பாள‌ர் ஜா‌ர்‌ஜ் ஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸ ், ‌‌ சிவசேனா தலைவ‌ர் மனோக‌ர் ஜோ‌ஷி உ‌ள்பட‌ப் ப‌ல்வேறு மு‌க்‌கிய‌த் தலைவர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

மோடி தனது பார‌ம்ப‌ரிய உடையான பைஜாமா கு‌ர்தா அ‌ணி‌ந்‌திரு‌ந்தா‌ர். குஜரா‌த்‌தி மொ‌ழி‌யி‌ல் பத‌வி‌ப் ‌பிரமாண‌ம் ஏ‌ற்று‌க் கொ‌ண்டா‌ர்.

அ‌ப்போது மைதான‌ம் முழுவது‌ம் கு‌வி‌ந்‌திரு‌‌ந்த 1 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பா.ஜ.க. தொ‌ண்ட‌ர்களு‌ம ், ஹ‌ி‌ந்து மத‌த் துற‌விகளு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியுட‌ன் ஆரவார‌ம் செ‌ய்தன‌ர்.

மு‌ன்னதாக மைதான‌த்‌தி‌ற்கு‌ள் நுழை‌ந்த மோடி உடனடியாக அ‌த்வா‌ன ி, ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங் ஆ‌கியோ‌ரிட‌ம் செ‌ன்று க‌ட்டியணை‌த்து வா‌ழ்‌த்து‌ப் பெ‌ற்றா‌ர். ‌பி‌ன்ன‌ர் ம‌ற்ற தலைவ‌ர்க‌ளிட‌ம் செ‌ன்று அவ‌ர்க‌ளிட‌மு‌ம் வா‌ழ்‌த்துகளை‌‌ப் பெ‌ற்றா‌ர்.

மோடி‌யி‌ன் இ‌ந்த‌ச் செய‌ல ், மோடி முத‌ல்வராக‌த் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து முர‌ண்ப‌ட்டு ‌நி‌ன்ற தலைவ‌ர்களு‌க்கு ‌விய‌ப்பை அ‌ளி‌த்தது.

பத‌வியே‌ற்ற‌பிறகு ‌திற‌ந்த ‌ஜ‌ீ‌ப்‌பி‌ல் ஏ‌றிய மோடி மைதான‌த்தை‌ச் சு‌ற்‌றிவ‌ந்து ‌மீ‌ண்டு‌ம் ஒருமுறை ந‌ன்‌‌‌றி தெ‌ரி‌வி‌த்தா‌ர். அ‌ப்போது அவருட‌ன ், அ‌த்வா‌னி உ‌ள்‌ளி‌ட்ட பா.ஜ.க.‌வி‌ன் மூ‌த்த தலைவ‌ர்க‌ள் இரு‌ந்தன‌ர்.

குஜரா‌த் ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் முத‌‌ல்வ‌ர் மோடி ம‌ட்டு‌ம் இ‌ன்று பத‌வியே‌ற்று‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர். ம‌ற்ற அமை‌ச்ச‌ர்க‌ள் யா‌ர் எ‌ன்பதை ‌விரை‌வி‌ல் பா.ஜ.க. தலைவ‌‌ர்க‌ள் கூடி முடிவு செ‌ய்யவு‌ள்ளன‌ர்.

4 ஆவது முறையான பா.ஜ.க. ஆ‌ட்‌சி!

மோடி தலைமை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ள த‌ற்போதைய அரசையு‌ம் சே‌ர்‌த்து குஜரா‌த் மா‌நில‌த்‌தி‌ல் பா.ஜ.க. 4 ஆவது முறையாக ஆ‌ட்‌சியமை‌க்‌கிறது.

ஏ‌ற்கெனவே 1995, 1998 ம‌ற்று‌ம் 2002 ஆ‌கிய ஆ‌ண்டுக‌ளி‌ல் நட‌ந்த ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்த‌ல்க‌ளி‌ல் பா.ஜ.க. வெ‌ற்‌றிபெ‌‌ற்றது.

நட‌ந்து முடி‌ந்த ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்த‌லி‌ல் நரே‌ந்‌திர மோடி தே‌ர்த‌ல் போ‌ட்டியாள‌ர்களுட‌ன் சே‌ர்‌த்து தனது க‌ட்‌சி‌க்கு‌ள் உருவான எ‌தி‌ர்‌ப்பையு‌ம் ‌மீ‌றி பா.ஜ.க. வை வெ‌ற்‌றிபெற‌ச் செ‌ய்தா‌ர்.

தே‌ர்தலு‌க்கு‌ப் ‌பிறகு நட‌ந்த க‌ணி‌ப்புகளை‌ப் பொ‌ய்யா‌க்‌கிய பா.ஜ.க., மொ‌த்தமு‌ள்ள 182 இட‌ங்க‌ளி‌ல் 117 இட‌ங்களை‌க் கை‌ப்ப‌ற்‌றியது. கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சியா‌ல் 59 இட‌ங்களை ம‌ட்டுமே பெற முடி‌ந்தது. ம‌ற்றவை 6 இட‌ங்களை‌ப் ‌பிடி‌த்தன.

வா‌ஜ்பா‌ய்‌க்கு ம‌ரியாதை!

புதிதாக வெற்றி பெற்ற பா. ஜ.க. எம்.எல்.ஏ. க்களின் கூட்டம ், காந்தி நகரில் நேற்று நடந்தது. அதில் மேலிட பார்வையாளர்களாக வெங்க‌ய்யா நாயுட ு, அருண் ஜெட்ல ி, ஓம் மாத்தூர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பதவி ஏற்கும் தேதி குறித்து ஆலோசனை நடந்தபோத ு, பா. ஜ. க.வி‌ன் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு டிசம்பர் 25-ஆ‌ம் தேதி பிறந்தநாள் என்பது சுட்டிக் காட்டப்பட்டது.

எனவ ே, அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் 27-ஆ‌ம் தேதிக்கு பதிலாக இரண்டு நாட்கள் முன்னதாக 25-ஆ‌ம் தேதியே (இன்று) பதவி ஏற்க மோடி முடிவு

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments