Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் இணைய கணக்கு மூலம் மோசடி!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (19:45 IST)
வங்கியில் உள்ள இணைய கணக்கில் இருந்து ரூ.92 ஆயிரம் மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் கணக்கை பரிமாறிக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தருகின்றன. இவை இன்டர்நெட் பாங்கிங் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை கணக்கி வைத்துள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த ரகசிய வார்த்தையை சங்கேத வார்த்தையாக (பாஸ்வேர்ட ் ) பயன்படுத்திக் கணக்கை இயக்கலாம். வங்கியின் இணையதளத்திற்கு சென்று கணக்கு எண், சங்கேத வார்த்தை குறிப்பிட்டவுடன், அவரின் வங்கி கணக்கு இயங்க தொடங்கிவிடும். அவர் பணத்தை மற்ற வங்கி கணக்கிற்கு மாற்றலாம்.

இந்த வசதியை பயன்படுத்தி, அடுத்தவரின் சங்கேத வார்த்தையை தெரிந்து கொண்டு, குறிப்பிட்ட வங்கி கணக்கை இயக்கி மோசடி செய்கின்றனர். இதே மாதிரி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கொல்கத்தா கிளையில் இணைய வசதியுடன் உள்ள கணக்கு வைத்துள்ள அமன்ஜித் சிங் கணக்கில் இருந்து ரூ.92 ஆயிரம் மோசடி செய்தது அம்பலத்திற்கு வந்துள்ளது.

இது பற்றி பாட்டியலா காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.கே.அஸ்தானா கூறுகையில், பாட்டியாலா நகரைச் சேர்ந்தவர் அமன்ஜித் சிங். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்கின்றார்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கொல்கத்தாவில் கிளையில் கணக்கு வைத்துள்ளார்.

இவருக்கு இந்த வங்கியின் இணையதள பக்கம் மாதிரி உள்ள இணைய தளத்தில் இருந்து அவரின் கணக்கு எண், கணக்கை செயல்படுத்துவதற்கான சங்கேத வார்த்தையை கேட்டு இ-மெயில் வந்துள்ளது. அதில் இவரின் கணக்கை புதுப்பிப்பதற்கு என்று கூறப்பட்டிருந்தது. இவரும் வங்கியில் இருந்து தகவல் கேட்பதாக கூறி அனுப்பியுள்ளார்.

சில நாட்கள் கழித்து அமன்ஜித் சிங் அவரின் கணக்கை சரிபார்த்த போது, கணக்கில் இருப்பில் வைக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை மட்டுமே இருந்துள்ளது. இதற்கும் அதிகப்படியாக இருந்த ரூ.92 ஆயிரம் கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த வழக்கை காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர் மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவரின் கணக்கில் உள்ள பணத்தை சென்னையில் இருந்து இயக்கப்படும் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. சில தினங்களில் இது மாதிரி யாரோ ஒருவர் லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்திருக்கின்றனர். வேறு வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.










எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments