Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானியங்களால் ஏற்றத்தாழ்வு நீங்கவில்லை : பிரதமர்!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (13:55 IST)
சமூகத்தில் நிலவிவரும் எற்றத்தாழ்வுகளை குறைக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டு வந்த மானியங்களால் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!

தலைநகர் டெல்லியில் பொருளாதார வளர்ச்சிக் கழகத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஏற்றத்தாழ்வை நீக்கி சமத்துவத்தை உருவாக்குவது என்ற பெயரில் நாம் மானியங்களாக மிகப்பெரும் அளவிற்கு நிதி வழங்கியுள்ளோம். ஆனால், அது திறனையும் மேம்படுத்தவில்லை, ஏற்றத்தாழ்வையும் நீக்கவில்லை என்று கூறினார்.

கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மன்மோகன் சிங், ஒவ்வொரு மாநிலத்திலும் கிராம, நகர ஏற்றத்தாழ்வு நிலவி வருவது பெரும் கவலையாகும் என்று கூறியுள்ளார்.

11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் மூலம் கிழக்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளின் வளர்ச்சியை இந்தியாவும் எட்ட முடியும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

இந்தியா தற்பொழுது கண்டுவரும் பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க முதலீட்டையும், சேமிப்பு விகிதத்தையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்றும், அதுமட்டுமின்றி, அதிகமான தொழிலாளர்களை ஈடுபடுத்தும் தொழிலகங்கள் விரிவாக்கத்தையும் நாம் காண வேண்டும் என்றும், நாட்டின் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments