Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமப்புறங்களில் தொலைபேசிகளை அதிகரிக்க வேண்டும் -பிரதமர்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (20:35 IST)
நாட்டின் கிராமப் புறங்களில் தொலைபேசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று டெல்லியில் இன்று இந்திய தொலைத் தொடர்பு - 2007 கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய பொருளாதார வளர்ச்சி வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளதாகவும ், 9 விழுக்காட்டை நோக்கி முன்னேறி வருவதாகவும் தெரிவித்த பிரதமர், 11 -வது திட்டக் காலத்தில் 10 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். பெருகிவரும் இளைய சமுதாயத்தின் எண்ணிக்கையும ், அதிகரித்து வரும் சேமிப்பு விகிதமும் குறுகிய காலத்தில் நமது இலக்கை எட்ட இயலும் எனத் தான் நம்புவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதற்கு நம்முன் உள்ள பெரிய தடையாக இருப்பத ு, தகுதி வாய்ந்த மொழில் நுட்ப பணியாளர்கள ், உயர்தர உள்கட்டமைப்பு வசதியும்தான் என்று சிங் தெரிவித்துள்ளார். 11 -வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் மிகப் பெரிய அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்க் க, நாட்டின் உள்கட்டமைப்புகளை மட்டும் மேம்படுத்த 18 லட்சம் கோடி ரூபாய் தேவைப் படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொலைத் தொடர்பை பயன்படுத்துவதற்கான வாய்ப்ப ு, மிகப் பெரிய அளவிலான கிராமப்புற - நகர்புற இணைப்பு இல்லாத நிலை உள்ளதாக கூறிய பிரதமர ், கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சியடைந்து வந்துள்ளதையும் சுட்டிக் காட்டினார ். அதே நேரத்தில் உலகிலேயே நம்நாட்டில் தாக் தொலைபேசிக் கட்டணம் மிகக் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

பெரும்பாலான நமது கிராமப் புறங்களில் குறைந்த அளவில் தொலைத் தொடர்பு வசதி உள்ளத ு, அல்லது தொலைத் தொடர்பு வசதி சுத்தமாக இல்லை என்று கூறினார். தொலை தொடர்பு அடர்த்தி இன்னும் கிராமப்புறங்களில் ஒற்றை இலக்க எண்ணில் தான் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் தொலைபேசி இணைப்பு வழங்கப்பட உள்ளதாக அப்போது கூறப்பட்டதைநினைவு கூர்ந்த பிரதமர் மன்மோகன் சிங ், அந்த இலக்கை இன்னும் எட்ட இயலாததால் தான் அதனை செய்து முடிக்க வேண்டி பாரத் நிர்மான் திட்டத்தில் தொலைபேசி இணைப்பையும் சேர்த்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.


"



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments