Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர் ‌மீது உ‌ரிமை ‌மீற‌ல் ‌பிர‌‌ச்சனை!

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (11:48 IST)
மா‌நில‌ங்களவை‌யி‌ல ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ மீதா ன ‌ விவாத‌த்‌தி‌ன ் போத ு ‌ பிரதம‌ர ் தெ‌ரி‌வி‌த் த கரு‌த்துகளு‌க்கா க, அவ‌ர ் ‌ மீத ு ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர ் ய‌ஷ்வ‌ந்‌த ் ‌ சி‌ன்ஹ ா உ‌ரிம ை ‌ மீற‌ல ் தா‌க்‌கீத ு கொடு‌த்து‌ள்ளா‌ர ்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்த பிறகு இப்பிரச்சனையை சின்ஹா கொண்ட ு வந்தார். அப்போது அவைத் தலைவர் பொறுப்பில் இரு‌ந்த பேரா‌சி‌ரிய‌ர் பி.ஜே.குரியன், சின்ஹா அளித்த தா‌க்‌கீது அவைத் தலைவ‌ரி‌ன் ஆய்வில் இருப்பதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நடைபெற்றபோத ு, "1991- ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா இருந்தபோது ஜப்பானுக்குச் சென்றார். ஆனால் அவரால் ஜப்பான் நிதியமைச்சரைக் கூட சந்திக்க முடியவில்லை,'' என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த விளக்கம் உண்மைக்கு மாறானது என்று கு‌றி‌ப்‌பி‌ட்ட யஷ்வந்த் சின்ஹா, தவறான தகவலை அ‌ளி‌த்த பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதாக கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments