Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌திகளை இணை‌ப்பத‌ற்கு 4.5 ல‌ட்ச‌ம் கோடி செலவாகு‌ம்: ம‌த்‌திய அரசு தகவ‌ல்!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (12:52 IST)
நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதற்கு 35 முதல் 40 ஆண்டு காலமாகு‌ம் என்றும், இந்த திட்டத்திற்கான மொ‌த் த செலவு 4.5 லட்சம் கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.

மா‌நில‌ங்களவை‌யி‌ல ் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ம‌த்‌தி ய நீர்ப்பாசன துறை அமை‌ச்ச‌ர் ஜெயப்பிரகாஷ் நாராயண் யாதவ் இந்த தகவலை தெரிவித்தார்.

" தேசிய நத ி‌ நீ‌ர ் இணைப்பு சிறப்பு பணிக்குழு, இரு செயல் திட்டங்களை முறையே 2003, 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதங்களில் சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்துக்கு மாநிலங் க‌ ளிடையே ஒருமித்த கருத்தை விரைந்து உருவாக்குவதற்காக, தகுந்த அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்று அந்த திட் ட‌ ங்க‌ளி‌ல் கரு‌த்து தெரிவிக்கப்பட்ட ு‌ ள்ளத ு.

தென்னக நதிகளை முதலில் இணைப்பதே பொருத்தமாக இருக்கும் என்றும், இமாலய பகுதி நதிகளை இணைப்பது சர்வதேச அளவிலான நடவடிக்கை என்பதால் 2-ஆம் கட்டமாக வட இந்திய நதிகள் இணைப்பை மேற்கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு 35 முதல் 40 ஆண்டு காலம் பிடிக்கும் என்றும், இந்த திட்டத்திற்கான மொத்த செலவுத்தொகை 4 லட்சத்து 44 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும், தேசிய பொருளாதார செயலாக்க ஆய்வு குழு மதிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முதலீடு கு‌றி‌த்த ு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் சிறப்பு பணிக்குழு ஆலோசனை நடத்தி உள்ளது.

அ‌ப்போத ு, முதலீட்டில் பொதுமக்கள ், தனியார்களின் பங்களிப்பு ‌மிகவு‌ம ் அவசியம் என்று அந்த வங்கி கரு‌த்த ு தெரிவித ்‌ திருக்கிறது. தேசிய நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. வறட்சி, வெள்ளத்தில் இருந்து நாட்டை காப்பதற்கான இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.'' எ‌ன்று ஜெயப்பிரகாஷ் நாராயண் யாதவ் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments