Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7240 பழ‌ங்கால‌ச் ‌சி‌ன்ன‌ங்க‌ள் பாதுகா‌க்க‌ப்படு‌கி‌ன்றன : ம‌‌த்‌திய அரசு!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (11:49 IST)
'' நமத ு நா‌ட்டி‌ல ் 7240 பழங்காலச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன'' எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

மா‌நில‌ங்களவை‌யி‌ல ் கே‌ள்‌வ ி ஒ‌ன்று‌க்க ு ப‌தில‌ளி‌த் த ம‌த்‌தி ய கலா‌‌ச்சார‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் அ‌ம்‌பிக ா சோ‌ன ி, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் சார்பில் 3667 பழங்காலச் சின்னங்களும், மாநில அரசுகளில் சார்பில் 3573 பழங்காலச் சின்னங்களும் பாதுகாக்கப்படுகின்றன எ‌ன்றா‌ர்.

இவை தவிர ஏராளமான பழங்காலச் சின்னங்கள் எந்த துறையினுடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருக்கின்றன. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதிகள், சிற்பங்கள், கோட்டைகள், அரிய கலைப் பொருட்கள் போன்றவை பற்றிய தகவல்களை சேகரித்து தொகுக்க தேசிய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 24 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்துமாறு பல்வேறு மாநிலங்கள் கோரியுள்ளன. அவற்றில் 14 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த இந்திய தொல்லியல் துறை ஒப்புதல் அளித்துள்ளது. கேரளத்தில் உள்ள தினூர், ராஞ்சியில் உள்ள குகாகர் ஆகியவை அவற்றில் அடங்கும். இமாச்சலப் பிரதேசத்தில் 40 பழங்காலச் சின்னங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments